கடைசி உலகப் போர் - தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தானே நாயகனாக நடித்து, இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகும் பணியாற்றி வரும் திரைப்படம்.
கடைசி உலகப்போர் திரைப்படத்தின் கதை
ஐநா சபையில் இருந்து சீனா, ரஷ்யா வெளியேறி ஐநா சபைக்கு மாற்றாக ரிப்பப்ளிக் என்கிற ஒரு அமைப்பை கொண்டு வருகிறார்கள். இதில் 72 நாடுகள் சேர்ந்துவிட்ட நிலையில், இந்தியா அந்த அமைப்பில் சேரவில்லை. இதனால், கோவப்பட்ட ரிப்பப்ளிக் அமைப்பினர் இந்தியா மீது பல வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி இந்தியாவை மொத்தமாக அழிக்க திட்டம் போடுகின்றனர்.
இப்படி கதை ஒருபக்கம் இருக்க, தமிழக முதலமைச்சரின் மச்சான் நட்டியின் பல லட்சம் கோடி பணம் ஒரு கண்டெய்னரில் சிக்கிக் கொள்கிறது. இதை வெளியில் கொண்டுவர நடராஜ் ஒரு மிகப்பெரிய கலவரத்தை உருவாக்குகிறார். முதலில் சாதாரணமாக ஆரம்பமான கலவரம் நாடே அழிந்து போகும் அளவிற்கு விஸ்வரூபமாக தமிழக முழுவதும் ராணுவத்தின் காட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. இந்த நேரத்தில் ரிப்பப்ளிக் அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்துகிறது. இதில், சென்னை முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. அதற்கு பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.