X
கைதி
Action | 25 Oct 2019 | U/A | 146 Mins
Tamil

கைதி கதை

கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, நரேன் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

அதிரடி படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிசெய்துள்ளார். இப்படம் 2019 தீபாவளி பண்டிகைக்கு யு/எ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது.

கைதி திரைப்படத்தின் தகவல்கள்

கைதி திரைப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியில் இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் 2019 - அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் 2019 ஆகஸ்ட் 26-ஆம் தேதியில் இணையத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.

ரிலீஸ்

கைதி திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரம் இல்லாமல் நாயகன், ஒரு குற்றத்தின் விளைவு என இரண்டையும் மையப்படுத்தி உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். திரைப்படம் முழுக்க அதிரடி, கொஞ்சம் எமோஷனல் என திரில்லர் கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ்.

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த திரையரங்குகளில் தொடக்கத்தில் வெளியாகி சிறந்த கதை அம்சத்தால் நல்ல விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம், தமிழகத்தில் அடுத்தடுத்த வாரங்களில் பல திரையரங்குகளை கவர்ந்து திரையிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 120 கோடிக்கு மேல் தமிழகத்தில் வசூல் சாதனை படைத்துள்ள கைதி திரைப்படம் இணையத்தில் நவம்பர் 25ம் நாள் ஹாட்ஸ்டார் ஆப்ல் வெளியானது. அதனை தொடர்ந்து சில தமிழ் ராக்கர்ஸ் எனப்படும் இணைய பக்கங்களிலும் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.


கைதி திரைப்படத்தின் கதை

ஒரு போதை கடத்தல் கும்பல் சென்னைக்குள் பெரிய அளவில் போதை மருந்துகளை கடத்த முயற்சி செய்கிறது. இதனை நேர்மையான காவல் அதிகாரி நரேன் தடுத்து அந்த கடத்தல் வாகனத்தை சீஸ் செய்கிறார். சுமார் 850 கோடி மதிப்பிளான 900 கிலோ போதை மருந்துகளை சீஸ் செய்த போலீஸ் அதிகாரி நரேன் மற்றும் அவருக்கு உதவி செய்தவரை கொன்று, போதை மருந்தினை திருப்பி கொண்டு செல்ல கடத்தல் காரர்கள் போராடுகிறார்கள்.

அதே சமயத்தில் கடத்தல் காரர்களின் சில விஷமிகளால் காவல் துறையில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் அனைவரும் போதை மருந்துகள் கலக்கிய பாகனத்தை தெரியாமல் பருகி உயிருக்கு போராடுகின்றனர்.

அந்த இடத்தில் ஜெயில் ஆயுள் தண்டனை அனுபவித்து வெளியாகும் கார்த்தியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து வாகனத்தில் வைத்திருக்கிறது போலீஸ். வாகனத்தில் இருக்கும் கார்த்தியிடம் உதவி கேட்டகிறார் நரேன். சில பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் காவலருக்கு உதவி செய்ய ஒப்புக்கொள்கிறார் நாயகன் கார்த்தி.

போதை மருந்துகளால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரிகளை ஒரு லாரியில் ஏற்றி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் கார்த்தி, நரேன் மற்றும் தீணா.

இந்த சமயத்தில் இவர்கள் சீஸ் செய்த போதை மருந்துகளை பதிக்கு வைத்திருந்த காவல் நிலையத்தை சுற்றி வலைக்கிறார்கள் கடத்தல் ரௌடிகள். இந்த நேரத்தில் சில ரௌடிகள் நரேன் மற்றும் அவருக்கு உதவி செய்த காவலர்களை கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

இறுதிவரை நாயகன் கார்த்தி காவலர்களை காப்பாற்ற போராடுகிறார். எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் இந்த போராட்டத்திற்குள் வரும் நாயகன் கார்த்தி கடத்தல் காரர்களின் சூழ்ச்சியிலிருந்து காவலர்களை காப்பாற்றுகிறார். இவரின் இந்த செயலினால் கடத்தல் காரர்களின் கோபம் கார்த்தியின் பக்கம் திரும்புகிறது. 

இதோடு இந்த படத்தின் கதையை முடிக்கிறார் இயக்குனர். இக்கதை தொடர்ச்சியாக கைதி இரண்டாம் பாகமாக உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+