காக்கா முட்டை குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க, குழந்தைகள் அனைவரும் புது முகங்களாக அறிமுகமாகியுள்ளனர்.
இத்திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றுள்ளது.