twitter
    Tamil»Movies»Kalari»Story

    களரி கதை

    களரி தமிழ் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை கிரண் சந்த் இயக்க, கிருஷ்ணா, வித்யா பிரதீப், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வி வி பிரசன்னா இசையமைத்துள்ளார். 

    கதை : 

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தமிழர் பகுதியான வாத்துருதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார் நாயகன் முருகேசன் (கிருஷ்ணா). குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகும் முருகேசனுக்கு, தன் தங்கை தேன்மொழியை (சம்யுக்தா) ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்து கரை சேர்க்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் குடிகார தந்தை மாரியால் (எம்.எஸ்.பாஸ்கர்) வரும் வரனெல்லாம் கெட்டுப்போகிறது. தந்தையை எதிர்க்க துணிவில்லாத முருகேசன், என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் சூழலில், உள்ளூர் பையன் அன்வரை (விஷ்ணு) காதலிக்கிறார் தங்கை தேன்மொழி. ஆனால் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் தந்தை.

    இதற்கிடையில் உள்ளூர் முக்கியப் பிரமுகர் சித்திக்கிடம் வேலை பார்க்கும் மூர்த்திக்கு தேன்மொழி மீது காதல் ஏற்பட, அவரது தந்தை மாரிக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து மகளை கரெக்ட் செய்யும் வேலையை பார்க்கிறார். தேன்மொழி வாரை திருமணம் செய்தார், அவரது திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie களரி with us? Please send it to us ([email protected]).