twitter
    Tamil»Movies»Kalari
    களரி

    களரி

    U/A | Action
    Release Date : 24 Aug 2018
    2.5/5
    Critics Rating
    5/5
    Audience Review
    களரி தமிழ் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை கிரண் சந்த் இயக்க, கிருஷ்ணா, வித்யா பிரதீப், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வி வி பிரசன்னா இசையமைத்துள்ளார். 

    கதை : 

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தமிழர் பகுதியான வாத்துருதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார் நாயகன் முருகேசன் (கிருஷ்ணா). குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகும் முருகேசனுக்கு, தன் தங்கை தேன்மொழியை (சம்யுக்தா) ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்து கரை சேர்க்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் குடிகார தந்தை...
    • கிரண் சந்த்
      கிரண் சந்த்
      Director
    • சென்டிஹ் கிலோத்
      சென்டிஹ் கிலோத்
      Producer
    • வி வி பிரசன்னா
      வி வி பிரசன்னா
      Music Director
    • tamil.filmibeat.com
      2.5/5
      தங்கை மீது அதீத பாசம் வைத்திருக்கும் அண்ணன் கிருஷ்ணா. போகிறவர் வருகிறவர் என எல்லோரிடமும் தர்ம அடி வாங்கினால், திருப்பி அடிக்க தைரியம் இல்லாத கோழை. இந்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். கிருஷ்ணாவை காதலிப்பது மட்டுமே வித்யா பிரதீப்பின் வேலை. கடமையே கண்ணாயிரம் என கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். தங்கையாக வரும் சம்யுக்தாவை, இனி நிறைய சினிமாக்களில் ஹீரோவின் தங்கையாக பார்க்கலாம். நன்றாகவே நடித்திருக்கிறார்.

      தங்கச்சி இப்படி ஒரு கஷ்டத்துல இருக்கும் போது எந்த அண்ணனாவது ஹீரோயின் கூட டுயட் பாடுவானா இயக்குனர் சார். ஹீரோ அப்பாவி தான். அதுக்காக இப்படியா. அதுவும் இன்னார் தான் இதுக்கெல்லாம் காரணம்னு ஈஸியா யூகிக்க முடிஞ்சுடுது. அதனால சுவாரஸ்யமும் போய்விடுகிறுது.

      எம்.எஸ்.பாஸ்கர் எந்நேரமும் குடிச்சுகிட்டே இருப்பது ஒருக்கட்டத்துல சலிப்பை ஏற்படுத்திடுது. தயது ச..