Don't Miss!
- News
முதல்வர் ஆய்வு.. ராணிப்பேட்டை எஸ்பி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
- Lifestyle
ஆண்களே! உங்க மனைவி உங்ககிட்ட எதிர்பார்க்கிறது இந்த விஷயங்கள் தானாம்... லவ்வோட பண்ணிடுங்க!
- Sports
ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுமா? அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு.. இந்தியாவும் பங்கேற்பு
- Automobiles
இனி இந்த கார்களை வாங்கின மாதிரிதான்! இத செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாங்களா? புலம்பும் மக்கள்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கத்தியை வச்சிக்கிட்டு களரி சண்டையை காஜல் எப்படி போடுறாங்க பாருங்க.. வெயிட்டா உருவாகும் இந்தியன் 2!
சென்னை: திருமணம் முடிந்து குழந்தையை பார்த்துக் கொள்ளும் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்துக்காக குதிரையேற்றம், களரி சண்டை என தூள் கிளப்பி வருகிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவங்கி உள்ளது.
இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அடேங்கப்பா
150
கோடியா..
இந்தியன்
2
படத்துக்காக
இந்தியாவிலேயே
அதிக
சம்பளம்
வாங்கப்
போறாரா
கமல்?

இந்தியன் 2வில் காஜல்
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் பூஜையில் இந்தியன் தாத்தாவாக கமல் வேடமிட்டு நிற்க அவர் அருகே செம க்யூட்டாக காஜல் அகர்வால் நின்று போஸ் கொடுத்து படத்தில் இருப்பதை உறுதி செய்தார். இந்த படத்தில் 80 வயது களரி வித்தை தெரிந்த பாட்டியாக காஜல் அகர்வால் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

சுகன்யா இல்லையா
இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதி மனைவியாக சுகன்யா தானே நடித்திருந்தார். இப்போ காஜல் அகர்வால் எப்படி என்கிற கேள்வி அனைத்து ரசிகர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவருக்கு பதில் இவர் என சீரியலில் போடுவது போல போடப் போகிறாரா ஷங்கர் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், சுகன்யா கேரக்டரில் இல்லை இன்னொரு கதாபாத்திரத்தில் தான் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற சுகன்யா மறைந்ததும் சேனாபதிக்கு வயது முதிர்ந்த காலத்திலும் உதவி செய்வார் எனக் கூறப்படுகிறது.

காஜலையே மாற்ற முடிவு
இந்தியன் 2 படம் ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவு கட்டி திருமணம் செய்து, குழந்தையும் பெற்றுக் கொண்டு செட்டில் ஆனார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கு பதிலாக த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா? தீபிகா படுகோனை நடிக்க வைக்கலாமா என்கிற பேச்சுகள் நடந்தன. ஆனால், இந்தியன் 2 தாமதம் ஆன நிலையில், அதற்குள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க கிளம்பி வந்து விட்டார் காஜல் அகர்வால்.

ஹார்ஸ் ரைடிங்
வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் குதிரையை ஓட்டிக் கொண்டு சண்டையிடுவது போன்ற ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் இணையத்தில் கசிந்தன. காஜல் அகர்வாலும் அந்த சண்டைக் காட்சியில் இருப்பதாகவே தெரிகிறது. அதற்குத்தான் அவர் சமீபத்தில் குதிரையேற்ற பயிற்சிகளை செய்து வீடியோக்களை ஷேர் செய்திருந்தார்.

களரி பயிற்சி
இந்தியன் தாத்தா வர்மக் கலை பயிற்சியை கற்ற நிலையில், களரி பயிற்சி தெரிந்த பாட்டியாக காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் வரப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்துக்காக கத்தியை வைத்துக் கொண்டு களரி பயிற்சி, சிலம்பம் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

முகத்தில் வெறி
காஜல் அகர்வால் வெறித்தனமாக சண்டை போடும் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அவரது முகத்தில் தெரியும் வெறியை பார்த்தால் இந்தியன் 2 படத்தில் பெரிய சம்பவம் இருக்கப் போவது கன்ஃபார்ம் என ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.