twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்கூல்ல கண்டிப்பா சொல்லி கொடுக்கணும்.. இந்த வயதிலும் அசத்தலாகக் களறி கற்கும் முன்னாள் ஹீரோயின்!

    By
    |

    கொச்சி: பிரபல முன்னாள் ஹீரோயின், இந்த வயதிலும் அசத்தலாகக் களறி கற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    தமிழில் கமலின் விக்ரம், ஆனந்த ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பூ, பகலில் பெளர்ணமி உள்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை லிஸி.

    அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ள லிஸி, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

    பீட்டருடன் வனிதா ரொமான்ஸ்.. வைரலாகும் போட்டோஸ்.. இது ஒரு பொழப்பா.. என விளாசும் நெட்டிசன்ஸ்!பீட்டருடன் வனிதா ரொமான்ஸ்.. வைரலாகும் போட்டோஸ்.. இது ஒரு பொழப்பா.. என விளாசும் நெட்டிசன்ஸ்!

    கல்யாணி பிரியதர்ஷன்

    கல்யாணி பிரியதர்ஷன்

    இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள், சித்தார்த் என்ற மகன் உள்ளனர். கல்யாணி சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். அடுத்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

    பாரம்பரிய கலை

    பாரம்பரிய கலை

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியதர்ஷனை விவாகரத்து செய்தார், நடிகை லிஸி. இதையடுத்து சென்னையில் வசித்து வரும் லிஸி, இப்போது, கேரள பாரம்பரிய கலையான களறியை கற்று வருகிறார். சின்ன வயதிலேயே இந்தக் கலையை கற்காதது வருத்தமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    வயது தடையல்ல

    வயது தடையல்ல

    இதுபற்றி அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: களறி கற்றுக் கொள்வதற்கு சிறந்த கலை. இதற்கு வயது ஒரு தடையல்ல, என்பதை இந்த படத்தில் இருந்து பார்க்க முடியும். என்னை போல நீங்கள் இதை குறைவாக கற்றுக்கொண்டாலும் மனதுக்கும் உடலுக்கும் இது அற்புதமான உடற்பயிற்சி.

    களறி அடிப்படை

    களறி அடிப்படை

    நடிகை கலைராணி மற்றும் லக்‌ஷ்மண் குருஜியுடன் இந்தப் புகைப்படத்தில் இருக்கிறேன். எனக்கான வருத்தம், சிறுமியாக இருந்த போதோ, டீன் ஏஜிலோ இந்தக் கலையை நான் கற்றிருக்க வேண்டும் என்பதுதான். என்னைப் பொறுத்தவரை களிறியின் அடிப்படைகளை பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    அது ஒரு கடல்

    அது ஒரு கடல்

    ஏனென்றால் இது சுய ஒழுக்கம், உடல் ரீதியான பல பலன்களைத் தரக்கூடியது. அதோடு நமது மகள்களின் தற்காப்புக்கும் உதவும். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமான நெட்டிசன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது ஒரு கடல் என்று சிலரும் எங்க இருக்குன்னு சொல்லுங்க, எங்க பிள்ளைகளையும் சேர்க்கணும் என்று சிலரும் விசாரித்துள்ளனர்.

    English summary
    Actress Lissy say, 'Children should be taught Kalari in schools for it's health benefits and self discipline and it may also help our daughters in self-defence'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X