X
கள்வன்
Action | Drama | 04 Apr 2024 | U/A | 142 Mins
Tamil

கள்வன் கதை

கள்வன் - இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு 'அக்சஸ் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனுமான ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, இப்படத்தின் பின்னை இசைக்கு இசையமைப்பாளர் ரீவா இசையமைத்துள்ளார்.

அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள கள்வன் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் இப்படத்தின் இயக்குனர் பி வி ஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.

கள்வன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2023 ஜனவரி 6ல் வெளியிட்டனர், படக்குழுவினர். கள்வன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ஏப்ரல் 4ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.



கள்வன் திரைப்படத்தின் கதை

சத்யமங்கலம் அருகே ஒரு கிராமத்தில் திருடர்களாக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கேபிஒய் தீனா இருவரும் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் ஊரில் திருடவே இடமில்லை என்பதை அறிந்து பக்கத்து ஊரில் திருட செல்கின்றனர். வழக்கம்போல ஹீரோயின் இவானா வீட்டுக்கு சென்று திருட போகும் இடத்தில் சிக்கி கொள்கிறார் ஜி.வி. பிரகாஷ். அதன் பின்னர் ஹீரோயினுடன் காதல் மலர்கிறது. ஹீரோயினை ஊருக்கு திருமணம் செய்து கூட்டிட்டு வருவார் என பார்க்கும் போது அங்கே செம ட்விஸ்ட்டாக வயதான பாரதிராஜாவை வீட்டுக்கு அழைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். காட்டையும் காட்டு விலங்கான யானையை காப்பாற்ற வேண்டும் என ஆரம்பித்த கதை கடைசியில் முதியவர்களை தவிக்க விடக்கூடாது என முடித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+