X
கண்ணே கலைமானே
Comedy | Drama | Family | 22 Feb 2019 | U | 124 Mins
Tamil

கண்ணே கலைமானே கதை

கண்ணே கலைமானே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள காமெடி மற்றும் காதல் திரைப்படம் . இத்திரைப்படத்தை இப்படத்தின் கதாநாயகரான உதயநிதி ஸ்டாலினின் ரெட் கெய்ன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கண்ணே கலைமானே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் கிராம விவசாயிகளின் கதை. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடிக்க, கிராம வங்கி ஆய்வாளராக தமன்னா நடித்துள்ளார். விவசாய கடன் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை உருவாகியுள்ளது.

கதை 
இயற்கை விவசாய ஆர்வலரான சோழவந்தான் கமலக்கண்ணன் (உதயநிதி) ஒரு வேளாண் பட்டதாரி. பொருளாதார நிலையில் சிறப்பான இடத்தில் இருக்கும் கமலக்கண்ணன், நேர்மை, உண்மை, நியாயம் மற்றும் உலகில் உள்ள அனைத்து நல்ல குணங்களும் படைத்த சாதுவான பிள்ளை. வங்கியில் லோன் வாங்கி ஊராருக்கு உதவி செய்து வருகிறார் கமலக்கண்ணன். இவர் லோன் வாங்கியிருக்கும் வங்கியின் மேலாளராக வருகிறார் பாரதி (தமன்னா). இருவருக்கும் முதலில் மோதல், பின்னர் காதல் என படம் நகர்கிறது. ஆனால் இந்த காதல் திருமணத்தில் கைக்கூடுவதற்கு தடையாக இருக்கிறார் உதயநிதியின் பாட்டி வடிவுக்கரசி. அப்பா மற்றும் பாட்டி பேச்சை தட்டாத உதயநிதி, தமன்னாவை எப்படி கரம்பிடிக்கிறார், அந்த திருமண உறவு என்ன ஆகிறது என்பது தான் மீதி படம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+