கதகளி இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் கேதரின் திரேசா, ரெஜினா, சூரி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
கதை :
கடலூர் மீனவத் தலைவன் தம்பா கட்டபஞ்சாயத்து நடத்தி அதிகாரம் புரிந்து வருகிறார். அவர் விஷால் குடும்பத்தினரை ஒருமுறை தாக்க, விஷாலின் அப்பாவின் கால் பறிபோகிறது. அதன் தொடர்ச்சியாக விஷால் வெளிநாடு செல்ல, கேதரின் தெரசாவுடன் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு கல்யாணத்திற்காக கடலூர் வருகிறார் விஷால். திருமணத்திற்கு முந்தைய நாள் தம்பா கொல்லப்படுகிறார்.
விசாரணையை விரைவில் முடிக்க, விஷாலை கைது செய்ய வருகிறது போலீஸ். விடிந்தால் திருமணம். உண்மையான கொலையாளியை இறுதியில் கண்டறிந்தனரா..? என்பதை விறுவிறுப்பாக கதையை நகர்த்துகின்றார் இயக்குனர்.