X
கொலை
Drama | Mystery | Thriller | 21 Jul 2023 | U/A | 129 Mins
Tamil

கொலை கதை

கொலை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்திரி என பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர்  கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

கிரைம் & திரில்லர் திரைக்கதையில் ரசிகர்களின் கவனத்தை கவரும் வகையில் பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.

கொலை திரைப்படம் 2023ம் ஆண்டு ஜூலை 21ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.



கொலை திரைப்படத்தின் கதை

பிரபல மாடல் அழகியான மீனாட்சி சவுத்திரி, தனது அப்பார்ட்மெண்ட் இல்லத்தில் பிணமாக கிடக்கிறார். அவரை கொலை செய்தது யார்? என்பது தான் இந்த படத்தின் கதை. 

அந்த மாடல் அழகிக்கு நெருக்கமான போட்டோகிராஃபர், மேனேஜர், ஏஜென்ட், காதலன் என பல கதாபாத்திரங்களை சந்தேகிக்கும் போலீஸ் இறுதியில் கொலையாளியை எப்படி கண்டு பிடித்தனர், யார் அவர் என்பது தான் கொலை படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+