கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஒரு காதல் கலந்த குடும்ப திரைப்படம், இதை எழுதி இயக்கியவர் கே. ரங்கராஜன் ஆவார். இப்படத்தில் ஸ்ரீ காந்த், சிங்கம் புலி, பூஜிதா, நளினி, டெல்லி கணேஷ் மற்றும் ஆர்.கே. விஜயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவு கிருஷ்ணா என்பவரால் செய்யப்பட்டுள்ளது, த.தாமோதரன் இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் பணக்காரர்களாக காட்டிக் கொள்கின்றார்கள், பின்னால் அது ஏதும் உண்மை இல்லை என்று தெரிய வரும்போது அவர்களுக்குள் ஒரு பிளவு ஏற்படுகின்றது. இவர்கள் பிரிய நினைக்கும் போது அங்கே உள்ள ஒரு வயதான தம்பதியினரை பார்த்து உண்மையான சந்தோஷம் பணத்தில் அல்ல காதலில் தான் உள்ளது என்பதை உணர்கின்றார்கள்.
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் மார்ச் 14, 2025 தேதி திரையரங்குகளில் வெளியானது.