குருக்ஷேத்திரம் இயக்குனர் நாகண்ணா இயக்கத்தில் தர்சன், சோனா சூட், அர்ஜுன் மற்றும் பல தென்னிந்திய முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படம் மஹாபாரதத்தில் நடக்கும் குருக்ஷேத்திர போரினை மயக்கருவாக கொண்டு உருவாகியுள்ளது.
திரைப்படத்தின் படக்குழு
இந்தியர்களின் புராண காவியமான மஹாபாரதத்தில் நடக்கும் ஒரு அங்கத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு திரைப்படமாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் முனிரத்னா தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் ஜெயநன் வின்சென்ட் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ஜோ நீ ஹர்ஷா பணியில், இசையமைப்பாளர் வி. ஹரிகிரிஷ்ணா இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தினை தமிழில் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தினை வெளியிடவுள்ளது.