லைகர் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்ட, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகி 2022, ஆகஸ்ட் 25ல் உலகம் முழுவதும் நேரடியா திரையரங்கில் வெளியாகியுள்ளது.
லைகர் திரைப்படத்தின் கதை
சின்ன வயசில் இருந்தே மைக் டைசனை குருவாக எண்ணி பார்த்து மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனாக மாற வேண்டும் என நினைக்கும் ஹீரோ, கடைசியில் அந்த மைக் டைசனே டானாக மாறி தனது காதலியை கடத்தி வைக்க அவளை மீட்க குருநாதர் மைக் டைசனை அடித்துப் போட்டு அவருடன் செல்ஃபி எடுப்பது தான் லைகர் படத்தின் கதை.