லவ்வர் - இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தனது 'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் குடும்பப் படமாக உருவாகியுள்ள லவ்வர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள லவ்வர் திரைப்படத்திற்கு, தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
லவ்வர் திரைப்படத்தினை தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனமான 'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' மற்றும் 'MRP என்டர்டைன்மெண்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
லவ்வர் திரைப்படத்தின் கதை
கதைக்கரு: பல ஆண்டுகளாக காதலித்து வரும் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் காதலை எவ்வாறு பாதிக்கிறது, என்பதே இப்படத்தின் கதைக்கரு.
கதை
ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தை விட டாக்ஸிக் உலகமாக தற்போது நெகட்டிவிட்டி மற்றும் வன்மத்துடன் சுழன்றுக் கொண்டிருக்கிறது. காதலிலும் டாக்ஸிக் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு பெண்ணை காதலிக்க என்னவெல்லாமோ குரங்கு வித்தைக் காட்டும் இளைஞர்கள் அதே ஒரு பொண்ணு ஓகே சொல்லி விட்டால் அவளை அதை செய்யக் கூடாது, இதை பண்ணக் கூடாதுன்னு அவங்க அம்மாவை விட அதிகமாக டார்ச்சர் செய்யும் சூழலில் இன்றைய இளைஞர்களின் காதல் எப்படி மாறி இருக்கிறது. இது எப்படி இருக்க வேண்டும் என்பதை பாடமாக நடத்தாமல் அருண் (மணிகண்டன்) மற்றும் திவ்யா (ஸ்ரீகெளரி பிரியா) இருவரையும் நடிக்க வைத்து படமாக எடுத்திருக்கிறார் பிரபுராம் வியாஸ்.