லக்கி மேன் - இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு, வீரா, ரேச்சல் ரெபக்கா என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான 'திங்க் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் எமோஷனல் திரைக்கதையில் உருவாகியுள்ள லக்கி மேன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மதன் எடிட்டிங் செய்துள்ளார்.
லக்கி மேன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 செப்டம்பர் 01ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
லக்கி மேன் திரைப்படத்தின் கதை
அதிர்ஷ்டம் இல்லாத வாழ்க்கையை தான் வாழ்வதாக நினைத்து கொண்டிருக்கும் யோகி பாபு, ஒரு புரோக்கர் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு அழகான குடும்பம் உள்ளது. சீட்டு கம்பெனி நடத்தும் நிறுவனம் குலுக்கல் முறையில் யோகி பாபு-விற்கு ஒரு காரை பரிசாக வழங்குகிறது.
கார் வந்ததும் தன் வாழ்வில் சில மாற்றங்களை உணர்கிறார், யோகி பாபு. தீடிரென யோகிபாபுவின் கார் காணாமல் போக இவருக்கு பல வழிகளில் இருந்து சிக்கல்கள் வர தொடங்குகிறது. பின் என்ன ஆனது என்பதே லக்கி மேன் திரைப்படத்தின் கதை.