மாறா இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ப்ரதீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்ப இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற "சார்லி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும்.
மாறா திரைப்படத்தின் கதை
கதைக்கரு: ஓவியங்களின் நகல் மற்றும் சில குறியீடுகளை கொண்டு தனக்கு தெரியாத ஒரு நபரை தேடி செல்லும் பெண்ணின் பயணம்.
ஆன்லைன் ஓடிடியில் மாறா
மலையாள சினிமாவில் வெளியாகி பல தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இத்திரைப்படம், அதிகாரப்பூர்வமாக ரீமேக் உரிமையை பெற்று தமிழில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம். முதலில் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தியேட்டர் பணி நிறுத்தம் மற்றும் சில காரணங்களால் ஆன்லைன் ஓடிடியில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ல் வெளியாகிறது.
பிரபல முன்னணி ஆன்லைன் ஓடிடி நிறுவனமான "அமேசான்" நிறுவனம், இத்திரைப்படத்தினை தனது ஆன்லைன் "அமேசான் பிரைம் வீடியோ" செயலியில் வெளியிட்டு உலகம் முழுவுதும் விநியோகம் செய்கிறது.
அமேசான் நிறுவனம் மாறா திரைப்படத்தினை 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், பின்னர் சில காரணங்களால் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ல் வெளியிட முடிவு செய்துள்ளது.