மார்கன் ஒரு அதிரடி வகை தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை விஜய் ஆண்டனியே வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை எஸ். யுவா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை லியோ ஜான் பால் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து செய்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை மீரா விஜய் ஆண்டனி மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஜய் ஆண்டனி மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளனர்.
கதை
மார்கன் ஒரு கொலை மற்றும் குற்ற விசாரணையை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் திரைப்படமாகும். ஒரு அனுபவமிக்க போலீஸ் அதிகாரி ஒரு சிக்கலான வழக்கை விசாரிக்கிறார், அந்த வழக்கில் ஒவ்வொரு தடமும் ஒரு புதுச்சிறு உண்மையை வெளிக்கொள்கிறது. இதன் நடுப்பகுதியில் ஒரு புதுமுக வில்லன் கதையில் நுழைவதால், பரபரப்பும் மர்மமும் மேலும் அதிகமாகிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் மார்கன் ஒரு நுணுக்கமான ஆனால் அதிர்ச்சியூட்டும் சஸ்பென்ஸ் அனுபவத்தை தருகிறது.
வெளியீட்டு தேதி
மார்கன் திரைப்படம் ஜூன் 27, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.