twitter
    X
    Home சினி தரவரிசை

    நடிகை ரம்யா கிருஷ்ணனின் சிறந்த 5 தமிழ் திரைப்பட கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Sunday, August 21, 2022, 01:08 PM [IST]

    நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் புகழ் பெற்ற திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் படங்கள் என இந்த பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணனின் சிறந்த 5 தமிழ் திரைப்பட கதாபாத்திரங்கள் இங்கு உள்ளன. பாகுபலி படத்தின் ராஜமாதா, படையப்பா படத்தின் நீலாம்பரி என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமான ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த சிறந்த 5 கதாபாத்திரங்கள் இங்கு உள்ளது.

    cover image
    படையப்பா

    படையப்பா

    1

    1999-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படத்தின் பலமே நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் தான். நீலாம்பரி என்னும் ஒரு ஆக்ரோஷமான அதிக மனவலிமை உடைய ஒரு பெண் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இன்றும் பல ரசிகர்கள் தமிழ் திரையுலகில் உள்ளனர். இந்த கதாபாத்திரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் திரைவாழ்வில் இவர் நடித்த ஒரு முக்கிய வேடம் ஆகும்.

    பாகுபலி

    பாகுபலி

    2

    2015-ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் "ராஜமாதா" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ஆம் ஆண்டு வெளியானது, இப்படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இந்திய அளவில் பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பெரிய அளவில் புகழ் பெற்று சிறந்த நடிகைக்கான பல விருதுகளை இவருக்கு பெற்று தந்துள்ளது.

    பஞ்சதந்திரம்

    பஞ்சதந்திரம்

    3

    2002-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் நகைச்சுவையாகவும், வில்லத்தனமாகவும் இருந்து இப்படத்தினை சுவாரஸ்யமான கதைக்களம் ஆக மாற்றியுள்ளது.

    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    4

    2019-ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் பலரின் நடிப்பில் வெளியாகி விமர்சனம் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். லீலா என்னும் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அழுத்தமான வசனங்கள் மற்றும் தனது நடிப்பின் மூலம் இப்படத்தில் இவரது கதாபாத்திரத்தை திரைக்கதைக்கு ஏற்றுவாரு நடித்து பல விருதுகளை வென்றுள்ளார்.

    ராஜ காளியம்மன்

    ராஜ காளியம்மன்

    5

    அம்மன் கதாபத்திரத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இந்த கதாபாத்திரங்களுக்காக தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். ராஜகாளி அம்மன், பொட்டு அம்மன் என பல அம்மன் கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X