X
தமிழ் » திரைப்படங்கள் » சூப்பர் டீலக்ஸ்
சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

Drama | 29 Mar 2019 | A | 176 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

சூப்பர் டீலக்ஸ் கதை

சூப்பர் டீலக்ஸ் ஆரண்ய காண்டம் புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர்களாகிய நலன் குமாரசாமி, நீலன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்கள்.  இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களில் இத்திரைப்படமானது முதன் முதலில் "ஏ" சான்றிதழை பெற்றுள்ளது.  கதைக்களம் நான்கு கோணங்களில் நான்கு கதையம்சங்களை வைத்து நான்கு கதைகளும் ஒவ்வொன்றுடன் ஒவ்வொன்றோடு தொடர்பு இல்லாமல் இருக்கும் நிலையில். ஒருவர் செய்யும் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் மற்றவர்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது. அது அவர்களுக்கு நன்மையா? தீமையா? என்றும், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஏன் இது இவ்வாறு நடக்கின்றது? ஏன் இது இவ்வாறு நடக்கவில்லை? என்ற பல கேள்விகளை முன்வைத்து அதற்கு பதிலாக வாழ்க்கை அவ்வாறுதான் போகும் நாம்தான் அதை வாழவேண்டும் என்ற சித்தாந்தத்தில் முடிகிறது இந்த சூப்பர் டீலக்ஸ்.  கதை திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவதும், வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத அளவிற்கு கதை நகர்கிறது. ஆபாச படம் பார்க்கவேண்டும் என்று தயாராகின்றனர் ஒரு 5 சிறுவர்கள், இச்சிறுவர்களுள் ஒருவனின் தாயான (ரம்யா கிருஷ்ணன்), ஆபாச படத்தின் நாயகியாக தொலைக்காட்சியில் காட்சி தர, இதை கண்ட ரம்யா கிருஷ்ணனின் மகன் கோபத்துடன் தொலைக்காட்சியை உடைத்துவிட்டு தன அம்மாவை கொல்வதற்கு புறப்படுகிறான். திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர் சமந்தா மற்றும் பஹத் பாசில், இதில் சமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், இவ்விசயமானது கணவன் பஹத் பாசிலுக்கு தெரியவருகிறது. பின்னர் சமந்தா தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்பிணத்தினை அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர்கள் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றனர். இந்த நான்கு கதைகளில் இவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைகளும் எவ்வாறு மற்றவர்களை சென்றடைகிறது? பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீண்டார்களா? விஜய் சேதுபதி எவ்வாறு மகனுடன் இணைந்தார்? ரம்யா கிருஷ்ணனை கொல்லவரும் மகனுக்கு என்ன ஆயிற்று? என்பதே மீதிப்படம்.
Read More

சூப்பர் டீலக்ஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

சூப்பர் டீலக்ஸ் அணியின் தகவல்

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சூப்பர் டீலக்ஸ் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஆரண்ய காண்டத்துடன் சூப்பர் டீலக்ஸை நிறைய இடங்களில் தொடர்ப்பு படுத்திக்கொள்ளலாம். அதில் வரும் சப்பை - சுப்பு கதாபாத்திரங்களுடன் சமந்தா - பகத் பாசிலையும், கொடுக்காபுள்ளி - காளையன் கதாபாத்திரங்களுடன் ராசுகுட்டி - ஷில்பா கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்காது. கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் இரண்டாம் பாகம் போலவே இருக்கிறது. ஆனால் அதில் தர்மத்தை பற்றி பேசிய இயக்குனர், இதில் காமத்தை பற்றி பேசியிருக்கிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து படம் கேள்வி எழுப்புகிறது. அற்புதமும் ஷில்பாவும் சந்திக்கும் அந்த காட்சி, கடவுளின் இருப்பை கேள்விக் கேட்கிறுது. ஆனால் சில காட்சிகள் மிகைப்படுத்தப்படுவதால், சினிமாத்தனம் எட்டிப்பார்க்கிறது. முதல் பாதி படத்தில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதேபோல், தவறை கூட பாசிடிவாக எடுத்துக்கொள்ள சொல்கிறது படம். ஆனா, ஒரு பையன் குண்டா இருந்தா உடனே அவன காமெடி பீஸ் ஆக்கிட்றது என்ன மாதிரியான மனநிலை இயக்குனரே. அதேபோல, ஏலியன் வந்து வாழ்க்கை பாடம் எடுக்குறதெல்லாம் ரொம்ப டூச் ப்ரோ. கடைசியில வாழ்க்கையின் ரகசியம் காமத்தில் தான் இருக்கிறது என்று சொல்லிட்டீங்களே பாஸ். தப்பில்ல தப்பில்ல... படத்தில் கதை, லாஜிக் பிரச்சினை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் திரைக்கதையும், மேக்கிங்கும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. எப்படி இருந்தாலும், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் மற்றொரு விசித்திரமான படைப்பு இந்த 'சூப்பர் டீலக்ஸ்'.

சூப்பர் டீலக்ஸ் செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சூப்பர் டீலக்ஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+