X
முகப்பு சினி தரவரிசை

இன்ஸ்டாகிராமில் முன்னணி: அதிக போல்லோவெர்ஸ் கொண்ட கோலிவுட் நடிகர்கள்

Author Rajeswari Shankar | Updated: Friday, December 27, 2024, 03:41 PM [IST]

இந்த பட்டியலில், அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் கொண்ட கோலிவுட் நடிகர்களை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளோம். இவர்கள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த செல்வாக்கை கொண்டவர்கள் மற்றும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர். இந்த நடிகர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பணிகளுக்கு அவர்களின் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பு வருகிறது.


cover image
சிலம்பரசன்
1

13.4M followers

சிலம்பரசன் எஸ்.டி.ஆர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.

விஜய்
2

12.7M followers

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். 

சூர்யா சிவகுமார்
3

9.8M followers

சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன்
4

8.4M followers

சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

தனுஷ்
5

7.7M followers

தனுஷ், வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி தமிழ் மற்றும் இந்திய சினிமாஎன புகழ் பெற்றுள்ளார். 

கவின்
6

2.9M followers

கவின் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தொலைக்காட்சியில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர்.அறிமுகம் தொடக்கம்தனது கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பில் மேல் ஆர்வம் கொண்டுள்ள இவர், ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். 

அர்ஜுன் தாஸ்
7

2.9M followers

அர்ஜுன் தாஸ் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2019-ம் வெளியான கைதி திரைப்படத்தில் ஒரு வில்லன் நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+