twitter

    சூப்பர் டீலக்ஸ் கதை

    சூப்பர் டீலக்ஸ் ஆரண்ய காண்டம் புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர்களாகிய நலன் குமாரசாமி, நீலன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்கள்.  இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களில் இத்திரைப்படமானது முதன் முதலில் "ஏ" சான்றிதழை பெற்றுள்ளது. 

    கதைக்களம்
    நான்கு கோணங்களில் நான்கு கதையம்சங்களை வைத்து நான்கு கதைகளும் ஒவ்வொன்றுடன் ஒவ்வொன்றோடு தொடர்பு இல்லாமல் இருக்கும் நிலையில். ஒருவர் செய்யும் நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் மற்றவர்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது. அது அவர்களுக்கு நன்மையா? தீமையா? என்றும், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஏன் இது இவ்வாறு நடக்கின்றது? ஏன் இது இவ்வாறு நடக்கவில்லை? என்ற பல கேள்விகளை முன்வைத்து அதற்கு பதிலாக வாழ்க்கை அவ்வாறுதான் போகும் நாம்தான் அதை வாழவேண்டும் என்ற சித்தாந்தத்தில் முடிகிறது இந்த சூப்பர் டீலக்ஸ். 

    கதை
    திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு ஓடி போய் நீண்ட வருடங்கள் கழித்து தன் மகனை பார்க்க திருநங்கையாக வீட்டிற்கு வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தன் அத்தனை குமுறலையும் மனதில் வைத்துக்கொண்டு மகனுக்காக ஊருக்கு வருவதும், வந்த இடத்தில் அவர் காவல் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அந்த காவல் நிலையத்தில் விஜய் சேதுபதியை நடத்தும் விதம், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத அளவிற்கு கதை நகர்கிறது.

    ஆபாச படம் பார்க்கவேண்டும் என்று தயாராகின்றனர் ஒரு 5 சிறுவர்கள், இச்சிறுவர்களுள் ஒருவனின் தாயான (ரம்யா கிருஷ்ணன்), ஆபாச படத்தின் நாயகியாக தொலைக்காட்சியில் காட்சி தர, இதை கண்ட ரம்யா கிருஷ்ணனின் மகன் கோபத்துடன் தொலைக்காட்சியை உடைத்துவிட்டு தன அம்மாவை கொல்வதற்கு புறப்படுகிறான்.

    திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர் சமந்தா மற்றும் பஹத் பாசில், இதில் சமந்தா தன் பழைய காதலுடன் கள்ள உறவில் இருக்கும் போது காதலன் இறக்கிறான், இவ்விசயமானது கணவன் பஹத் பாசிலுக்கு தெரியவருகிறது. பின்னர் சமந்தா தன் கணவர் பஹத் பாசில் உதவியுடன் அப்பிணத்தினை அப்புறப்படுத்த நினைக்கும் போது அவர்கள் கடும் பிரச்சனை ஒன்றில் சிக்குகின்றனர்.

    இந்த நான்கு கதைகளில் இவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனைகளும் எவ்வாறு மற்றவர்களை சென்றடைகிறது? பிரச்சனைகளில் இருந்து இவர்கள் மீண்டார்களா? விஜய் சேதுபதி எவ்வாறு மகனுடன் இணைந்தார்? ரம்யா கிருஷ்ணனை கொல்லவரும் மகனுக்கு என்ன ஆயிற்று? என்பதே மீதிப்படம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சூப்பர் டீலக்ஸ் with us? Please send it to us ([email protected]).