twitter
    X
    Home சினி தரவரிசை

    வாத்தி, பகாசூரன் முதல் மைக்கேல்: 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, February 13, 2023, 03:01 PM [IST]

    இந்த ஆண்டு 2023 பிப்ரவரி மாதம் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் படங்களான தனுஷின் வாத்தி, சமந்தாவின் சகுந்தலம், அருண் விஜய்யின் பார்டர் படங்கள் வெளியாகவிருக்கிறது. தமிழ் திரையுலகில் இம்மாதம் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமில்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களான பொம்மை நாயகி, பகாசூரன், மைக்கேல் படங்களும் திரைக்கு வருகிறது, முழு விவரங்கள் இதோ.

    cover image

    ரன் பேபி ரன் - பிப் 3

    ரன் பேபி ரன் - இயக்குனர் ஜியென் கிருஷ்ணாகுமார் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.அதிரடி கதைக்களத்தில்...

    மைக்கேல் - பிப் 3

    மைக்கேல் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுதீப் கிஷான், வரலக்ஷ்மி சரத்குமார், கவுதம் மேனன், அய்யப்பா என பல திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை கரண் புரோடக்ஷன் நிறுவனம்  தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ்...

    தி கிரேட் இந்தியன் கிச்சன் - பிப் 3

    தி கிரேட் இந்தியன் கிச்சன் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜெர்ரி சில்வேர்ஸ்டெர் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

    பொம்மை நாயகி - பிப் 3

    பொம்மை நாயகி இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா ரஞ்சித் தனது நீலம் புரோடுக்ஷன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர்...

    தலைக்கூத்தல் - பிப் 3

    தலைக்கூத்தல் - இயக்குனர் ஜெயாப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    டாடா - பிப் 10

    டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒளிப்பதிவு...

    காசேதான் கடவுளடா - பிப் 10

    காசேதான் கடவுளடா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படம் 1972ஆம் ஆண்டு முத்துராமன் - லட்சுமி நடிப்பில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.

    வசந்த முல்லை - பிப் 10

    வசந்த முல்லை இயக்குனர் ரமணன் புருஷோத்தம இயக்கத்தில் பாபி சிம்ஹா, காஸ்மீர பர்தேஷி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.

    வாத்தி - பிப் 17

    வாத்தி இயக்குனர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்த மேனன், சாய் குமார் என தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.அதிரடி - திரில்லர் கதையில் இந்த சமூகத்திற்கு...

    பகாசூரன் - பிப் 17

    பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நட்டி நடராஜன் மற்றும் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி 'ஜி எம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பகாசூரன் படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.அதிரடி - திரில்லர்...

    சகுந்தலம் - பிப் 17

    சகுந்தலம் இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.

    பார்டர் - பிப் 24

    பார்டர் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விஜயா ராகவேந்திரா தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இப்படமானது நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்கும் 31வது (AV 31) திரைப்படமாகும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X