மாஃபியா அத்தியாயம்-1 கதை

  மாஃபியா (அத்தியாயம் - 1) இயக்குனர் கார்த்தி நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் க்ரைம் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்‌ஷன்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

  அதிரடி மற்றும் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பிநொய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2020 பிப்ரவரி 21ல் திரைக்கு வரவுள்ளது.

  மாஃபியா திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்


  அதிரடி திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண் விஜய் இப்படத்தில் நாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

  மாஃபியா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2019 ஜூலை 2ல் இணையத்தளத்தில் லைக்கா புரொடக்‌ஷன்  நிறுவனத்தின் இணையதள பக்கத்தின் மூலம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியானது. இத்திரைப்படம் க்ரைம் திரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  மாஃபியா திரைப்படத்தின் படக்குழு பற்றிய தகவல்கள்

  மாஃபியா திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு

  மாஃபியா படத்தின் கதை

  அருண் விஜய் ஒரு நேர்மையான போதை மருந்து தடுப்பு அதிகாரி. இவருக்கு உதவியாளராக பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஒரு அறிமுக நடிகர் நடித்துள்ளனர். தன்னுடன் பணியாற்றும் பிரியா பவானி ஷங்கரை காதலித்தும், காவல்துறை பணியில் நேர்மையாக பணியாற்றும் அருண் விஜய் வாழ்க்கையில் தீடிரென சில சம்பவங்கள் அவரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.

  போதை மருந்து கடத்தல் சம்பவத்தில் இவர் சிலரை கைது செய்கிறார். ஆனால் இவர் கைது செய்யாத குற்றவாளிகள் வெறும் அடியாட்கள் மட்டுமே. அதனால் இவரின் தலைவனை பற்றி அறிய போராடுகிறார் அருண்விஜய்.

  தக்க சமயத்தில் அருண் விஜய்யின் உயர் அதிகாரியும் சமூக ஆர்வாளருமான தலைவாசல் விஜய் சிலரால் கொல்லப்படுகிறார். இந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் போதை கடத்தல் விஷமிகள் உள்ளதை பற்றி அறியும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் தலைவன் என பிரசன்னாவை தேடுகிறார்.

  பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

  மாஃபியா திரைப்படத்தின் படக்குழு மற்றும் ரிலீஸ் பற்றிய தகவல்கள்

  மாஃபியா படத்தின் படப்பிடிப்பு 2019 ஜூலை 06ல் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 35 நாட்களில் முடித்துள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் நாயகன் அருண் விஜய் மற்றும் வில்லன் பிரசன்னா-வின் சண்டை காட்சிகளை தாய்லாந்து நாட்டில் படபிடிக்கப் பட்டுள்ளது.

  2019 அக்டோபர் மாதம் 01ல் பிரசன்னாவின் டப்பிங் பணிகளை முடித்த படக்குழு பின்னர் 2019 நவம்பர் மாதம் 18ல் அருண் விஜய்யின் டப்பிங் பணிகளை முடித்து இப்படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளது.

  இப்படத்தின் முதல் டீஸரை 2019 செப்டம்பர் மாதம் 16ல் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானது. பின்னர் இப்படத்திற்கு தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

  மாஃபியா படத்தின் இரண்டாம் டீஸரை லைக்கா தயாரிப்பில் வெளியான 'தர்பார்' படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இப்படத்தின் இரண்டாம் டீஸரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

  **Note:Hey! Would you like to share the story of the movie மாஃபியா அத்தியாயம்-1 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).