மின்சார கண்ணா கதை

  மின்சார கண்ணா 1999 -ம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், விஜய், ரம்பா, குஷ்பூ, மோனிகா நடித்த அதிரடி, நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நா. முத்துக்குமார், வாலி பாடல் வரிகளை எழுத, இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.

  மின்சார கண்ணா படத்தின் பிரத்யேக தகவல்கள்

  2020-ம் ஆண்டு சிறந்த திரைப்படமாக ஆஸ்கர் விருதினை பெற்ற "பாராசைட்" என்ற கொரியன் திரைப்படத்தின் கதை இப்படத்தின் கதையை கொண்டுள்ளதால் இப்படம் 2020-ம் ஆண்டு பலரால் விமர்சிக்கப் பட்டு சர்ச்சைக்கு உள்ளானது.

  இப்படத்தினை இயக்கிய கே எஸ் ரவிக்குமாருக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

  மின்சார கண்ணா படத்தின் கதை

  இந்திரா தேவி (குஷ்பூ) ஆண்களை வெறுக்கும் ஒரு பிரபல தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு இருக்கும் முதல் எதிரி ஆண்கள் தான் என மன உறுதி கொண்டவர். குஷ்பூ-வின் இந்த முடிவுக்கு காரணம் இவரின் கடந்த வாழ்க்கையில் இவர் சந்தித்த இன்னல்கள் தான்.

  குஷ்பூ-விற்கு தங்கையாக நாயகி ஐஸ்வர்யா (மோனிகா காஸ்டெலினோ) என்ற நடிகை நடித்துள்ளார். இவர் தான் என்ற அகம்பாகவும், பணக்காரர் என்ற திமிரில் வாழ்ந்தவர். இவர் படிப்பதற்காக ஜெர்மனி நாட்டிற்கு செல்கிறார். அங்கு ஒரு பெரிய கோடீஸ்வரர் குடும்பமான மணிகண்டனின் குடும்பத்தை சந்திக்கிறார்.

  மணிகண்டனின் மகன் விஜய் மற்றும் நாயகி மோனிகா காஸ்டெலினோ காதலிக்கிறார்கள். இந்த விஷயம் தனது அக்காவிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை வரும் என என்னும் நாயகி மன குழுப்பதில் தவிக்கிறார்.

  இதனை அறிந்த விஜயின் குடும்பம் ஒரு ஏழையாக வேடம் அணிந்து விஜய்யின் காதலுக்காக குஷ்பூ-வின் வீட்டில் ஒரு தோட்டக்காரர், சமையல்காரர், வீட்டு காவலாளி என வேலை செய்து விஜய்யின் காதலுக்காக போராடுகிறார்கள்.

  இறுதியில் அந்த கோடிஸ்வரன் குடும்பம் சந்தித்த இன்னல்கள் என்ன? இவர்களின் காதல் இணைந்ததா? என்பதே படத்தின் கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie மின்சார கண்ணா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).