மூக்குத்தி அம்மன் 2
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் பாகம் 2 சூட்டிங் இன்று கோளாகலமாக பூஜையவுடன் தொடங்கியது. சுந்தர் சி, இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தினை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனர்களின் கீழ் ஐசரி கே. கணேஷ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் துனியா விஜய் வில்லனாக நடிக்கின்றார். யோகி பாபு, ரெஜினா கசாண்ட்ரா, அஜய் கோஷ், மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி எந்த படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வேற எந்த தகவலும் படக்குழுவால் இன்னும் வெளியிடப்படவில்லை.
மூக்குத்தி அம்மன் பாகம் 2 பூஜை விழா
நயன்தாராவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் பாகம் 2 பூஜை விழா இன்று சென்னையில் கிராண்ட் ஆக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா, சுந்தர் சி, குஷ்பூ, ரெஜினா கேசன்ரா ஹிப்ஹாப் ஆதி, மீனா, கூல் சுரேஷ், மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுந்தர் சி, படக்குழுவினர் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.
மூக்குத்தி அம்மன் 2 பட்ஜெட்
இந்தப் படத்தினை 100 கோடி செலவில் தயாரிக்கப் போவதாக தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பட பூஜையில் தெரிவித்துள்ளார்.
ரிலீஸ் தேதி
இதன் ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை ஆனால் மூக்குத்தி அம்மன் படம் போலவே இதனை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் பேன் இந்தியா லெவலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.