twitter
    Tamil»Movies»Muthu»Story

    முத்து கதை

    முத்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன் என தமிழ் திரைப்பட முன்னணி நடிகை நடிகர்கள் பலர் நடித்துள்ள அதிரடி மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜம் பாலசந்தர் தயாரிக்க, இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் குடும்ப திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 23ல்  தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியானது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அசோக் ராஜன், மற்றும் படத்தொகுப்பாளர் தணிகாசலம் எடிட்டிங் செய்துள்ளார்.

    முத்து திரைப்படம் 1994-ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான "தென்மாவின் கொம்பத்" என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திரைப்பயணத்தில் இவர் இயக்கிய சிறந்த திரைப்படங்களில் முத்து திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

    1995-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இத்திரைப்படம், 175 நாட்களை கடந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளது. உலகளவில் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம், 1998-ஆம் ஆண்டு ஜப்பான் மொழியில் ரீமேக் செய்யப்பட்டு ஜப்பான் நாட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

    கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம், கன்னட மொழியில் "சஹுக்கர" என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.




    கதை 

    முத்து என்பவர் சிவகாமி அம்மாவின் ஜமின் இல்லத்தில் பணிபுரியும் வேலைக்காரன். அவர் ஜமீன் இல்லத்தின் குதிரை இரதத்தையும் அவரது மகன் ராஜா என அனைவரையும் கவனித்து கொள்ளும் நபர். முத்து ஜமீன் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்.

    ஒரு நாள் முத்து மற்றும் ராஜா ஒரு நாடக நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது மேடை கலைஞரான ரங்கநாயக்கியை சந்திக்கிறார்கள், ராஜா உடனடியாக ரங்கநாயக்கியை காதலிக்கிறார். அம்பலதர் ராஜாவின் தாய்மாமன், அவர் தனது மகள் பத்மினியை ராஜாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். பத்மினி ராஜாவை நேசித்தாலும், அவன் காதலுக்கு அவன் பதிலளிக்கவில்லை.

    அந்த நிழச்சியின் நகைச்சுவை கலாட்டா மூலம் ரங்கநாயகி மற்றும் முத்து இடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. பின் அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக முத்து மற்றும் ரங்கநாயகி வழி தவறி வேறு இடத்திற்கு செல்கின்றனர்.

    பின் இவர்களுக்குள் காதல் மலர்கிறது, ரங்கநாயகியை தனது எஜமான் வீட்டிற்கு அழைத்து வருகிறார் முத்து, தனது எஜமான் ரங்கநாயகியை ஒரு தலையாக காதலிக்கிறார் என்பதை அறியாமல் திணறும் முத்து ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை பல விதமான கோணங்களில் வெடிக்கிறது. இதனால் முத்துவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் எஜமான். பின் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie முத்து with us? Please send it to us ([email protected]).