மை டியர் பூதம் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சம்யுக்த கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார்.
மை டியர் பூதம் திரைப்படத்தின் கதை
முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திருநாவுக்கரசு செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.