நாங்க ரொம்ப பிசி கதை

  நாங்க ரொம்ப பிசி இயக்குனர் பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின், ஷாம், யோகி பாபு என தமிழ் சினிமா முக்கிய பிரபலங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் சுந்தர்.சி தனது அவினி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து சன் தொலைக்காட்சியில் நேரடியாக 2020-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிடுகிறார்.

  இத்திரைப்படம் கன்னட சினிமாவில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களின் மூலம் மக்களின் கவனத்தை பெற்ற "மாயபஜார்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.

  திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் சன் தொலைக்காட்சியின் 'சன் பிக்சர்ஸ்' மற்றும் சன் என்.எக்ஸ்.டி (ஓ.டி.டி) நிறுவனம் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டு, 2020 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் சன் தொலைக்காட்சி நேரடியாக வெளியாகிறது. இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காகவே உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

  நாங்க ரொம்ப பிசி திரைப்படம் உலகளவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் முதல் திரைப்படம் ஆகும்.

  நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி மற்றும் எடிட்டர் ஃபென்னி ஆலிவர் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
   

   
  நாங்க ரொம்ப பிசி திரைப்படத்தின் கதை

  திருடனாக இருக்கும் யோகிபாபு (குபேந்திரன்) பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு எப்படியாவது தப்பித்து பல லட்ச பணத்தினை திருடி வாழ்வில் ஒரு செல்வேந்தராக வாழ வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைகிறது.

  பிரசன்னா - நேர்மையான காவல் அதிகாரி. லஞ்சம், மாமூல் என எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் நேர்மையாக பணியாற்றி வருகிறார். தனது அன்பான மனைவி ஸ்ருதி மரத்தே மற்றும் ஒரு மகன் என அன்பான குடும்பத்தில் வாழ்கிறார்.

  அஸ்வின் - ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வாலிபர். இவருக்கும் ஒரு பெரிய பணக்கார வீட்டு பெண்ணிற்கும் இடையே காதல் மலர்கிறது.

  பிரசன்னா தனது நேர்மையால் பதவி உயர்வு அடைகிறார். ஆனால் எதிர்பாராத வகையில் பிரசன்னாவின் மனைவி ஸ்ருதி மரத்தே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். இவரது மருத்துவ தேவைக்கு பல லட்ச பணம் தேவைப்படுகிறது. ஆனால் பிரசன்னா லஞ்சம் எதுவும் வாங்க முடியாத ஒரு இடத்திற்கு பனிமாற்றம் செய்யப்படுகிறார்.

  பிறரின் தொலைபேசி மற்றும் அவர்களின் நடவெடிக்கையை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் இருக்கும் பிரசன்னா, பணத்திற்கு பல இடங்களில் அலைகிறார். அச்சமயம் எதிர்பாராமல் மத்திய அரசு 500 மற்றும் 1000 ருபாய் பணங்களை யுபயோகிக்க தடை விதிக்கிறது.

  திருடனாக இருக்கும் யோகிபாபு-வை கூட்டாளியாக வைத்து கருப்பு பணம் வைத்திருக்கும் ஒரு சில பணக்காரரை நோட்டமிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை திருட திட்டமிடுகிறார், பிரசன்னா. இந்த திட்டத்தில் சிலர் பணத்தை கொள்ளையடிக்கும் யோகிபாபு, அஸ்வின் காதலிக்கும் பெண் வீட்டிற்கும் செல்கிறது.

  அங்கிருந்து அஸ்வின் இந்த கும்பலை தொடர்ந்து வந்து பிரசன்னா மற்றும் யோகிபாபு-வை கையும் காலுமாக பிடிக்கிறார். பின் அவர்களுடன் அஸ்வின் இணைந்து திருட தொடங்குகிறார்.

  இவர்கள் சென்னையின் உயர் காவல் அதிகாரி ஷயாம் பணத்தினை திருடுகிறார்கள். பின்னர் ஷ்யாம் இவர்களை கண்டுபிடுக்க முயற்சி செய்கிறார். பின் என்ன நடந்து என்பதே படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நாங்க ரொம்ப பிசி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).