நாயாடி - ஆதர்ஷ் மதிகாந்தம் தானே இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்துள்ள திகில் திரைப்படம். இப்படத்தினை அத்விக் விஷுவல் மீடியா, வாரியர் ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் இசையமைத்துள்ளார்.
திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி சௌமியா, மாளவிகா மனோஜ் மற்றும் ஃபேபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மோசெஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சி எம் இளங்கோவன் எடிட்டிங் செய்துள்ளார்.