நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கதை

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இவர் இயக்கும் முதல் திரைப்படம் இது. இதில் விஜய் சேதுபதி , காயத்தரி, விக்னேசுவரன், பகவதி பெருமாள், இராஜ்குமார் ஆகியோர் முன்னனி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நகைச்சுவையுடன் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் என்ற போதிலும் பின்னனி இசையமைத்தவர் சித்தார்த் விபின் ஆவார்.

    கதை:

    பிரேம்குமாருக்கு (விஜய் சேதுபதி) இரு நாட்களில் தன் காதலியுடன் இரு வீட்டார் அனுமதியுடன் திருமணம். அவர் தன் நண்பர்களின் அறைக்கு செல்கிறார் அவர்களின் விருப்பப்படி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் போது கால் தவறி கீழே விழும் அவருக்கு பின் மண்டையில் அடிபட்டு தற்காலிக மறதி ஏற்படுகிறது. அவர் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது என்பதையும் தன் காதலி தனலட்சுமியையும் (காயத்திரி) மறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அவர் நண்பர்கள் அவருக்கு மீண்டும் நினைவு திரும்ப மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறார்கள்.

    அங்கு மருத்துவர் இவருக்கு எப்போது வேண்டுமானாலும் நினைவு திரும்பி விடும் என்கிறார். பிரேம் குமாரின் திருமணம் இதனால் தடைபடக்கூடாது என்று நினைக்கும் நண்பர்கள் பிரேம் குமாரின் பெற்றோர்களுக்கும் யாருக்கும் தெரியாமல் பிரேமுக்கும் தனலட்சுமிக்கும் திருமணம் நடைபெற உதவுகிறார்கள். இதற்காக நடக்கும் செயல்கள் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன.
    **Note:Hey! Would you like to share the story of the movie நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).