X
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Drama | Family | 02 Aug 2024 | U/A | 135 Mins
Tamil

நண்பன் ஒருவன் வந்த பிறகு கதை

நண்பன் ஒருவன் வந்த பிறகு - இயக்குனர் ஆனந்த் ராம் தானே இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் பவானி ஸ்ரீ, மிர்ச்சி விஜய், இர்பான், இளங்கோ குமரவேல், குலப்புள்ளி லீலா என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் காஷிஃப் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஐஸ்வர்யா எம் மற்றும் சுதா ஆர் இணைந்து மசாலா பாப்கார்ன் மற்றும் வொயிட் ஃபெதர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிக்க, பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.

2024 ஆகஸ்ட் 2ல் உலகமெங்கும் வெளியான இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.



நண்பன் ஒருவன் வந்த பிறகு கதை

ஆனந்த் ராம் தனது சிறுவயதில் ஆனந்த் காலனி என்ற இடத்திற்கு குடும்பத்துடன் குடி வருகிறார். அப்பொழுது இருந்து அந்த ஏரியாவில் நண்பர்கள் அமைத்து ஒன்றாக பழகி வருகிறார். வளர்ந்த பின் இந்த நண்பர் கூட்டம் பிரியாமல் ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்க்கையில் முன்னேற பாடுபடுகிறது, இந்த திரைப்படம் வாழ்க்கையில் நண்பர்கள் உதவியில் ஜெயித்த நாயகன் பற்றிய கதை ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+