நந்திவர்மன் - இயக்குனர் ஜி வி பெருமாள் வரதன் (அறிமுக இயக்குனர்) இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜெரால்டு பெர்லிக்ஸ் இசையமைத்துள்ளார்.
திரில்லர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் வி செயோன் முத்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
2023ல் டிசம்பர் 29ல் தமிழ் சினிமாவில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
நந்திவர்மன் திரைப்படத்தின் கதை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆண்ட செஞ்சியின் ஒரு பகுதியான அனுமந்தபுரம் கிராமத்திற்கு, அனுமந்தீஸ்வரர் கோயிலில் உள்ள தங்கப் புதையலை கொள்ளையடிக்க கோர மற்றும் அவரது கூட்டாளிகள் வருகிறார்கள். கோரா மற்றும் அவரது கூட்டாளிகள் அனுமந்தீஸ்வரரின் கோயில் பொக்கிஷத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்க போரிடும் போது மன்னன் நந்திவர்மன் கோராவால் கொல்லப்படுகிறார்.
மன்னன் நந்திவர்மன் இறந்த பிறகு, இயற்கை சீற்றம் அடைந்து, அனுமந்த ஈஸ்வரர் கோயிலும் மண்ணில் புதைந்துவிட்டது. கோராவும் அவரது தோழர்களும் இயற்கை சீற்றத்தில் சிக்கி, மரணம் அடையும் வரை மண்ணில் புதைக்கப்படுகிறார்கள். இன்றும் கோவில் புதைந்து கிடக்கும் அனுமந்தபுரம் மலைக்கு யாரேனும் சென்றால் கோர ஆவியால் கொல்லப்படுவார்கள் அதனால் தான் ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் வர மறுக்கின்றனர் கிராம மக்கள்.
சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் போஸ் மற்றும் அவரது மாணவர்கள் அனுமந்தபுரம் கிராமத்திற்குச் சென்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பல்லவ மன்னன் நந்திவர்மனின் வரலாறு மற்றும் அனுமந்தீஸ்வரர் கோயிலை ஆய்வு செய்கிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சியால் அனுமந்தபுரம் கிராமத்தில் சொல்லொணாப் பேரழிவு ஏற்படும் என்று கூறி கிராம மக்கள் போஸ் மற்றும் அவரது குழுவினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் போஸ் மற்றும் அவரது குழுவினர் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவர்மனின் பாதுகாப்பில் அகழ்வாராய்ச்சியை தொடங்குகின்றனர்.
அனுமந்தபுரம் கிராமத்தில் தொல்லியல் துறையினர் தொல்லியல் ஆய்வுகளை தொடங்கிய பிறகு, அடுத்தடுத்து நடந்த மரணங்கள் அமானுஷ்யமான முறையில் நடந்தன. இறுதியில் கதையின் முடிவு என்ன? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கோராவின் ஆவி உண்மையில் அனுமந்தபுரத்தில் உள்ளதா? அனுமந்தபுரத்தில் அமானுஷ்யமாக இறந்தவர்களின் மருத்துவ பிரேத பரிசோதனை மூலம் தொடர் கொலைகளின் மர்மத்தை செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் குருவருமன் கண்டுபிடித்தாரா? அனுமந்தீஸ்வரர் கோவில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததா இல்லையா?