நட்சத்திரம் நகர்கிறது கதை

  நட்சத்திரம் நகர்கிறது - இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷார விஜயன் என பல நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் இப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.

  முற்றிலும் அரசியல் கலந்த ஒரு டிராமா படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.

  இப்படம் 2022, ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் படமாக திரையரங்களில் வெளியாகியுள்ளது. நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு '' சான்றிதழ் அளித்துள்ளது.
  நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் கதை

  சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் பாண்டிச்சேரியில் ஒரு கூத்துப் பட்டறைக்கு செல்கிறார். அங்கே காதல் பிரேக்கப் செய்த துஷாரா விஜயன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிடுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொள்ள நினைக்கும் டாப்பிக்கை வைத்தே காதல் என்கிற அற்புத உணர்வை வைத்து சமூகம் செய்யும் அரசியலை இயக்குநர் பா. ரஞ்சித் பேசியிருப்பது தான் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie நட்சத்திரம் நகர்கிறது with us? Please send it to us (popcorn@oneindia.co.in).