நட்சத்ரா இயக்குனர் மனோஜ் ராம் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடிக்கும் திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்க, இசையமைப்பாளர் பரத் ராகவன் இசையமைத்துள்ளார்.
திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மணிக்குமரன் சங்கரா எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2020 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 1ல் இணையதள சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகியது.