twitter

    நவரசா கதை

    நவரசா (நவரச) தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். இப்படம் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் ஆன்லைன் ஓடிடி நிறுவனம் மூலம் நேரடியாக வெளியாகியுள்ளது.

    இத்திரைப்படத்தில் 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். நவரசம் எனப்படும் 9 உணர்வுகளான கருணை, நகைச்சுவை, ஆச்சர்யம், கோபம், அமைதி, தைரியம், பயம், அருவருப்பு, சிங்காரம் (காதல்) என்னும் உணர்ச்சிகளை மையப்படுத்தி ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு பாகமாக மொத்தம் ஒன்பது பாகங்கள் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


    நவரசா திரைப்படம் ஒரு அந்தாலஜி திரைப்படமாக நெட்பிளிக்ஸ் ஆன்லைன் ஓடிடி நிறுவனம் மூலம் 2021 ஆகஸ்ட் 6ல் வெளியானது. இப்படத்தின் தயாரிப்பாளர் மணி ரத்னம் "இப்படத்திற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரக்கூடிய பணத்தை நேரடியாக பெப்சி ஊழியர்களுக்கு தரப்படும்" என கூறியுள்ளார். 


    நவரசா திரைப்படத்தின் கதை மற்றும் பிரத்யேக தகவல்கள்

    1. எதிரி (ரசம் - கருணை)

    இயக்குனர் பிஜோய் நம்பியார் இயகக்த்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த பாகம் கருணை அடிப்படையில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார்.

    தனது அண்ணனை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்த பிரகாஷ் ராஜுடன் ஒரு பேச்சு வார்த்தைக்கு சென்ற விஜய் சேதுபதி (தீரன்), பிரகாஷ் ராஜ் பேசிய வார்த்தைகளால் கோபம் அடைந்து கோபத்தில் பிரகாஷ் ராஜை அவர் வீட்டிலையே கொலை செய்கிறார். இதனை காணும் பிரகாஷ் ராஜின் மனைவி ரேவதி அதிர்ச்சியில் மனமுடைந்து மௌனமாக உள்ளார்.

    விஜய் சேதுபதியின் நண்பன் விவேக் பிரசன்னா அவரை ஒரு  வீட்டில் தலைமறைவாக தங்க வைக்கிறார். அங்கு விஜய் சேதுபதியின் மனசாட்சியாக பிரகாஷ் ராஜ் உருவாகி விஜய் சேதுபதியின் அமைதியை கெடுக்க, பின் விஜய் சேதுபதி ரேவதியை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார். ரேவதி விஜய் சேதுபதியை மன்னிக்கும் மனப்பான்மைக்கு வருத்துவதே இப்படத்தின் கதை.

    இறுதியில் ரேவதியின் கருணை விஜய் சேதுபதியை காப்பாற்றுகிறது. இந்த கருணை பிரகாஷ் ராஜ் அல்லது விஜய் சேதுபதிக்கு இருந்திருந்தால் உயிர் சேதங்கள் ஏற்பட தேவையில்லை, என்பதே படத்தின் கதைக்கரு.

    2. சம்மர் ஆப் '92 (ரசம் -  ஹாஸ்யம் (நகைச்சுவை))

    இயக்குனர் பிரியதர்சன் இயக்கும் இந்த பாகத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு, வொய் ஜி மஹேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இந்த பாகம் ஹாஸ்யா என்னும் நகைச்சுவை உணர்வை குறிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

    சினிமாவில் ஒரு பெரிய நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற யோகி பாபு (வேலுச்சாமி) நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். யோகி பாபு தான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மேடையில் அந்த பள்ளியில் பெற்ற அவரது அனுபவங்களை பற்றி நகைச்சுவையாக எடுத்துரைப்பதே இப்படத்தின் கதை.

    3. ப்ராஜெக்ட் அக்னி (ரசம் - ஆச்சர்யம்)

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் பிரசன்னா, அரவிந்த் சுவாமி, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த பாகம் ஆச்சர்யம் என்னும் உணர்ச்சியை குறிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் ரோஹனன் இசையமைத்துள்ளார்.

    விஞ்ஞானத்தில் ஏற்படும் ஆச்சிரியம் மற்றும் அதனின் விளைவுகள் தான் இப்படத்தின் கதை. எதிர்காலத்திற்கு சென்று தனது நிலையை கண்டு நிகழ்காலத்தை மாற்றி அமைக்கும் அரவிந்த் சுவாமி பின் அதனால் இவர் சந்தித்த இன்னல்கள் என இப்படம் எடுத்துரைக்கிறது.

    ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் 'டைம் ட்ராவல்' -யை பற்றி கார்த்திக் நரேன் ஒரு புதிய வடிவத்தில் திரைக்கதை மற்றும் வசனங்கள் அமைத்து ஆச்சிரியம் படுத்தியுள்ளார்.

    4. பாயசம் (ரசம் - அருவருப்பு)

    இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவரசத்தில் அருவருப்பு என்ற உணர்வை குறிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    கும்பகோணத்தில் சுபு என்பவர் மிக சிறந்த நற்பெயர் எடுத்து கௌரவமாக வாழ்ந்து வருகிறார். அவரது சித்தப்பா (டெல்லி கணேஷ்) சுபுவின் மேல் பொறாமையில் பொங்குகிறார். தனது அண்ணன் மகன் சுபுவின் படிப்பை நிறுத்தி நிர்கதி ஆக்கி சில வன்மம் செய்திருந்தாலும், சுபு தனது உழைப்பால் உயர்ந்து அனைவரையும் சகித்து வாழ்ந்து வருகிறார்.

    தனது மனைவி ரோகினி இறக்க, கற்பனை உலகில் ரோகினியுடன் வாழ்ந்து வருகிறார், டெல்லி கணேஷ். டெல்லி கணேஷின் பொறாமையால் அவர் செய்யும் அருவறுப்புடைய செயல்களே இப்படத்தின் ரசத்தினை உணர்த்துகிறது.

    5. பீஸ் (ரசம் - அமைதி)

    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கவுதம் மேனன், பாபி சிம்ஹா, சனத் நடிக்கும் பாகம். இந்த பாகம் நவரசத்தில் 'அமைதி' உணர்வை குறிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    தமிழ் ஈழம் பற்றிய கதை வடிவமைத்து இயக்கியுள்ளார், கார்த்திக் சுப்பராஜ். பாபி சிம்ஹா, கவுதம் மேனன், சனத் ஆகியோர் விடுதலை சிறுத்தை புலிகள் இயக்கத்தில் உள்ளனர். ஒரு இடத்தில் மறைந்து வாழும் இவர்கள் ஒரு சிறுவனின் கதையை கேட்டு, அந்த சிறுவனின் தம்பியை தேடி செல்கிறார் பாபி, ஆனால் சிறுவன் ஒரு நாய்க்குட்டியை தம்பி என கூறியுள்ளான்.

    வேறு வழி இன்றி அந்த நாய் குட்டியை எடுத்து வரும் பாபி, மனிதநேயம் இருப்பதாக கூறி அவர் செய்யும் சில செயலால் அவர் உயிர் விடுகிறார். 

    6. ரௌத்திரம் (ரசம் - கோபம்)

    தமிழ் சினிமாவில் நடிகராக புகழ் பெற்ற அரவிந்த் சுவாமி இயக்குனராக  இயக்கும் இந்த பாகம் கோபம் என்னும் உணர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    வடசென்னை பகுதியில் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழும் ஸ்ரீ ராம் - அம்மு அபிராமி, இவர்களது தாய் பண கஷ்டத்தில் உள்ளனர். அதிலிருந்து வெளிவர இந்த குடும்பம் முயற்சிக்கிறது. ஆனால் தாய் வறுமையை போக்க ஒரு தவறான உறவை மேற்கொள்ள, கோபத்தில் ஸ்ரீ ராம் அழகம் பெருமாளை கொள்கிறார். பின் என்ன நடந்தது, தங்கைக்கு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. 

    7. இன்மை (ரசம் - பயம்)

    இயக்குனர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த், பார்வதி நடித்திருக்கும் குறும்படம். இந்த படம் நவரசத்தில் பயம் என்ற உணர்வை அடிப்படையாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த பாகத்திற்கு இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

    பார்வதியை காண ஒரு ஊழியராக வரும் சித்தார்த், பார்வதி செய்த தவறுகளை சுட்டி காட்டி ஒரு பய உணர்ச்சியை ஏற்படுத்தி கொலை செய்வதே படத்தின் கதை. இதனை இஸ்லாமிய சமயத்தின் பாவம், பலி போன்ற பாணியில் திரைக்கதை வடிவமைத்துள்ளார் இயக்குனர்.

    8. துணிந்த பின் (ரசம் - தைரியம்)

    இயக்குனர் சார்ஜுன் இயக்கும் இந்த பாகத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் நடித்துள்ளனர். இந்த பாகம் தைரியம் உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

    போலீஸ் அதிகாரியாக உள்ள வெற்றி (அதர்வா) இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்காக காட்டில் பணி செய்கிறார். அச்சமையம் தேச துரோகிகள் போராட்ட நடத்த அதனை எதிர்த்து போராடுகின்றனர், காவலர்கள். அதில் எதிர் படையில் கிஷோர் உயிரோடு இருப்பதை அறிந்த அதர்வா, அவரை உயிரோடு தனது அலுவலகத்தில் சேர்ந்தாரா இல்லையா என்பதே கதை.

    9. கிட்டார் கம்பி மேலே நின்று (ரசம் - சிங்காரம் (காதல்))

    இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, பிராகிய மார்ட்டின், துளசி நடித்திருக்கும் படம். இப்படம் நவரசத்தில் காதல் என்ற உணர்ச்சியை உணர்த்துகிறது. இசையமைப்பாளர் கார்த்தி இந்த பாகத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கமல் ஒரு இசைக்கலைஞர். இவர் இசையமைத்த 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதற்கான அங்கீகாரம் இல்லாமல் தவிக்கிறார். அச்சமயம் லண்டன் சென்று தனது இசையை மேம்படுத்த நினைக்கும் சூர்யா, எதிர்பாராமல் தனது ஸ்டூடியோவில் ஒரு விளம்பர ஆல்பம் பாட வரும் பிராகிய மார்ட்டின் (நேத்ரா)-வை சந்திக்கிறார்.

    இவர்களுக்குள் நடக்கும் அழகான காதல் கதையே இந்த பாகத்தின் கதை.


    **Note:Hey! Would you like to share the story of the movie நவரசா with us? Please send it to us ([email protected]).