நேத்ரா இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் வினய், தமன் குமார், சுபிக்ஷ நடித்துள்ள திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் பரராஜசிங்கம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
கதைச்சுருக்கம்
பெற்றோருக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கு காணாமல் போகும் காதலனைத் தேடும் பெண்ணின் கதை தான் நேத்ரா.
கதை
தமன் குமாரும், சுபிக்ஷாவும் காதலர்கள். சுபிக்ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார். வினய் உதவியுடன் இருவரும் கனடா தப்பிச் செல்கின்றனர். ஆனால் காதலர்கள் சென்ற நேரம் அவசர வேலையாக வேறு நாட்டிற்கு சென்று விடுகிறார் வினய்.
இதனால், அந்நாட்டு போலீஸ் உதவியுடன், இமான் அண்ணாச்சியின் அறிமுகம் கிடைக்க, அவர் வேலை பார்க்கும் ஹோட்டலிலேயே தமன் வேலைக்கு சேர்கிறார். காதலர்கள் சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வேலையில், திடீரென மாயமாகிறார் தமன். இதனால் மீண்டும் போலீசை நாடுகிறார் சுபிக்ஷா. ஆனால், அப்படி ஒருவர் இங்கு வரவேயில்லை என்கிறார்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல். இது குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ்.
இந்த பிரச்சினைகளுக்கு இடையே வெளிநாடு சென்ற வினய், மீண்டும் கனடா திரும்ப, தமன் எப்படி மாயமானார்? அவர் கடத்தப்பட்டாரா? மீண்டும் காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் நேத்ரா படத்தின் மீதிக்கதை.