twitter

    நித்தம் ஒரு வானம் கதை

    நித்தம் ஒரு வானம் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் மற்றும் ரூபுக் பிரணவ் தேஜ் இணைந்து தயாரிக்க,  இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

    ஒரு அழகான காதல் 'ஃபீல் குட் மூவி' படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார்.

    நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/எ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 நவம்பர் 04ல் உலகமுழுவதும் திரையரங்கில் வெளியானது.




    நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் கதை

    ஐ.டி துறையில் வேலை செய்யும் நாயகன் அசோக் செல்வன் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என பல விஷயங்களில் ஒழுக்கமாகவும், கவனமாகவும் நடந்து கொள்கிறார். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்தன்று அதிகாலையில் மணப்பெண் தன் காதலனுடன் ஓடி செல்கிறார்.

    இதனால் மனமுடைந்து இருக்கும் அசோக் செல்வனிடம், அவரது டாக்டர் அபிராமி இரு கதைகளை கொடுத்து படிக்கச் சொல்கிறார். அந்த கதையில் வரும் நாயகனாக அசோக் செல்வன் தன்னையே நினைத்துக்கொண்டு படிக்க தொடங்குகிறார்.

    முதல் கதை ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் வீரா (அசோக் செல்வன்) - மீனாட்சி (ஷிவாத்மிக்கா)  என்பவர்களுக்கு நடக்கும் காதல் கதை. 

    இரண்டாம் கதை கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மதி (அபர்ணா பாலமுரளி) - அசோக் செல்வன் இடையே நடக்கக்கூடிய காதல் கதை.

    இவர் படித்த இந்த இரண்டு கதைகளில் உள்ள இறுதி பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கிறது. இந்த கதையின் முடிவை பற்றி அறிய நினைக்கிறார், அசோக். இதற்கு இவரது டாக்டர் அபிராமி அந்த கதைகளில் உள்ள கதாபாத்திரங்களின் முகவரியை கொடுத்து அவர்களை நேரில் சென்று பார்க்க சொல்கிறார்.

    அசோக் செல்வன் இந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை காண, ஒரு பயணம் மேற்கொள்கிறார். இவரது பயணத்தில் ரித்து வர்மா இணைந்து கொள்கிறார். முதலில் மோதலில் தொடங்கும் இவர்களது அறிமுகம் பின் நட்பாக மாறுகிறது.

    அசோக் செல்வன் மேற்கொண்ட இந்த பயணத்தின் மூலம் இவர் வாழ்க்கை பற்றிய என்ன அனுபவங்களை கற்று கொண்டார், என்பதே இப்படத்தின் கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie நித்தம் ஒரு வானம் with us? Please send it to us ([email protected]).