ஒரு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் திரைக்கதையை விரிவு படுத்தி அதனை இரண்டாம் பாகமாக சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் உருவாக்குவார்கள். சிலர் படப்பிடிப்பின் போதே அந்த படத்தின் திரைக்கதையின் அழுத்தத்தையும் சுவாரஸ்யத்தையும் மனதில் கொண்டு அந்த படத்தின் திரைக்கதையை இரண்டு பாகமாக பிரித்து இரண்டு படமாக உருவாக்க திட்டமிடுகின்றனர். தமிழ் திரைப்படங்களில் அப்படி பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வெற்றி / தோல்வி அடைகிறது. இந்த பட்டியலில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டு வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 2020ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படக்கூடிய திரைப்படங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.