ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி நடித்த காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆர் ரகுராம் இசையமைத்துள்ளார்.
கதை :
ஒரு கிடாயின் பார்வையிலிருந்து படம் தொடங்குகிறது. படத்தின் ஹீரோ விதார்த்க்கு 35 -வது வயதில் தான் திருமணம் நடக்கின்றது. மனைவி ரவீனா. விதாரத்தின் பாட்டி தன் பேரனுக்கு காலம் கழிந்தாலும் திருமணம் நடந்துவிட்டது என்று தம் குலதெய்வ கோவிலில் கிடா வெட்டுவதாக வேண்டுகிறார்.
கிடா வெட்டி விருந்து வைப்பதற்காக விதார்த், பாட்டி மற்றும் மனைவி ரவீனா ஆகியோர் உறவினர்கள் அனைவரையும் ஒரு லாரியில் ஏற்றி செல்கின்றனர். விதார்த் கோவிலுக்கு போகும் வழியில் லாரி டிரைவரிடம் கேட்டு லாரியை விதார்த் ஓட்டுகிறார்.
அதே நேரத்தில் எதிரில் மொபட்டில் வந்தவர் லாரி மீது மோதி இறந்து விடுகிறார். இதனால், குலா தெய்வ வழிபாடு தடைபடுகிறது. வண்டியை ஒட்டி விபத்து ஏற்படுத்தியது புது மாப்பிளை விதார்த் தான் என தெரிந்ததும் உறவினர்கள் அனைவரும் அவரை காப்பாற்ற பல்வேறு கோணங்களில் யோசிக்கின்றனர். மேலும், விபத்தில் இறந்தவரை புதைத்துவிட்டு பயத்தை தொடரவும் நினைக்கின்றனர். ஆனால், அதில் ஒரு பெரிய சிக்கல் உருவாக, இறந்த உடலை என்ன செய்தார்கள்..? அதன் பின் விதத்தின் நிலைமை என்ன ? கோவிலில் கிடா பலியிட்டனரா..? என்பதே மீதிக்கதை.