ஒரு நாள் கூத்து தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, கெனன்யா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் நடிகைகளாக அட்டகத்தி தினேஷ், கருணாகரன் மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை :
ஒரு நாள் கூத்து லக்ஷ்மி, சுஷீலா, காவ்யா என்ற மூன்று பெண்களை பற்றிய கதை. லக்ஷ்மி திருச்சியில் வாழும் அமைதியான பெண்ணாக வருகிறார். அவருடைய தந்தை அவருக்கு பல மாபிள்ளைகளை பார்க்கிறார். ஆனால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்தினால் நிராகரிக்கிறார்.
காவ்யா, நிறம் குறைவாக இருப்பதாலும், அவர் ரேடியோவில் பணிபுரிவதாலும், அவரை திருமணம் செய்வதற்கு யாரும் முன்வரமால் இருக்கின்றனர். காவ்யா, ஐடி துறையில் வேலை பார்க்கும் தலைகணம் பிடித்த பெண்ணாக வருகிறார். அவருடைய காதலர் ராஜ் (தினேஷ்) சாதாரண குடும்ப பையனாக இருப்பதும், எல்லாவற்றையும் சீரியஸாக பார்பதையும் காவ்யாவிற்கு பிடிக்காமல் போகிறது.
இந்த மூவரின் திருமண வாழ்க்கைக்கு முன்னதாக நடைபெறும் சம்பவங்கள் மற்றும் எதார்த்த வாழ்க்கை முறையே இத்திரைப்படத்தின் கதை. இறுதியில் இவர்களுக்கு பிரச்சனையாக இருந்த திருமணம் நடந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை..