X
தமிழ் » திரைப்படங்கள் » ஒரு நாள் கூத்து
ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

Comedy | Romance | 10 Jun 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஒரு நாள் கூத்து கதை

ஒரு நாள் கூத்து தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, கெனன்யா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் நடிகைகளாக அட்டகத்தி தினேஷ், கருணாகரன் மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். கதை :  ஒரு நாள் கூத்து லக்ஷ்மி, சுஷீலா, காவ்யா என்ற மூன்று பெண்களை பற்றிய கதை. லக்ஷ்மி திருச்சியில் வாழும் அமைதியான பெண்ணாக வருகிறார். அவருடைய தந்தை அவருக்கு பல மாபிள்ளைகளை பார்க்கிறார். ஆனால், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்தினால் நிராகரிக்கிறார்.  காவ்யா, நிறம் குறைவாக இருப்பதாலும், அவர் ரேடியோவில் பணிபுரிவதாலும், அவரை திருமணம் செய்வதற்கு யாரும் முன்வரமால் இருக்கின்றனர்.  காவ்யா, ஐடி துறையில் வேலை பார்க்கும் தலைகணம் பிடித்த பெண்ணாக வருகிறார். அவருடைய காதலர் ராஜ் (தினேஷ்) சாதாரண குடும்ப பையனாக இருப்பதும், எல்லாவற்றையும் சீரியஸாக பார்பதையும்  காவ்யாவிற்கு பிடிக்காமல் போகிறது.  இந்த மூவரின் திருமண வாழ்க்கைக்கு முன்னதாக நடைபெறும் சம்பவங்கள் மற்றும் எதார்த்த வாழ்க்கை முறையே இத்திரைப்படத்தின் கதை. இறுதியில் இவர்களுக்கு பிரச்சனையாக இருந்த திருமணம் நடந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை..
Read More

ஒரு நாள் கூத்து நடிகர்கள் & படக்குழுவினர்

ஒரு நாள் கூத்து அணியின் தகவல்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஒரு நாள் கூத்து விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு நாள் கூத்து... இந்தப் படம் எப்படி இருக்கும்? என்ற எந்த வித யோசனையும் இல்லாமல் போய் உட்கார்ந்தால்... உள்ளே ஏகப்பட்ட 'இறைவிகள்'! மூன்று இளம் பெண்கள்... அவர்களின் திருமணங்கள்... இதுதான் களம். அதை சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து உயிரோட்டமுள்ள ஒரு படமாக்கியிருக்கிறார் புது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். வெல்கம் நெல்சன்! கடைசியில் யாரோடு யாருக்கு முடிச்சு என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ். பெரும்பாலும் சினிமா கதைகளில் பெரிதாக வித்தியாசமும் இருப்பதில்லை. சொல்லப்பட்ட கதைகள்தான். ஆனால் சொல்லப்படும் விதத்தில்தான் ஒரு படம் வேறுபட்டு நிற்கிறது. ஒரு நாள் கூத்து அந்த லிஸ்டில் இடம்பெறுகிறது. மூன்று நான்கு கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்து அதை ஒரு கோட்டில் இணைப்பது கிட்டத்த சர்க்கஸ் சாகஸம். அதை செவ்வனே செய்திருக்கிறார் நெல்சன். அவருக்கு ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் பக்க பலமாய் இருந்திருக்கிறார்கள். 'இவ்வளவுதானா... நல்லாதானே இருக்கு.. இதுக்கா இவ்வளவு கெஞ்சல்' என்று ரமேஷ் திலக்குடன் படுக்கையில் ரித்விகா சொல்லும் காட்சி 'போல்ட்'தான் என்றாலும், இன்றைய சூழலில் ரொம்பவே ஆபத்துப்பா! இவர்தான் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியாது. எல்லோருக்குமே முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குநர். ஒரு பக்கா காதல் படம் எடுத்தால் அதில் முழு நாயகியாக நிவேதாவைப் பரிந்துரைக்கலாம். அபாரம். நமக்கு இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என ஏங்குவார்கள் படம் பார்க்கும், 'கமிட்' ஆகாத பையன்கள்! மியா ஜார்ஜ்.. இப்படியும் கூட பெண்கள், அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்தக் காலத்தில். அந்த கடைசி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்ததுமே, 'அப்பாடி.. இந்தப் பெண்ணுக்கு இவனையே கட்டி வைத்துத் தொலய்யா..' என்று நமக்குள்ளேயே சத்தமாகச் சொல்லிக் கொள்வதை உணர்கிறோம். நான்கு காட்சிகள்தான் என்றாலும் கருணாகரனின் பண்பட்ட நடிப்பு பாராட்ட வைக்கிறது. ஐம்பதுகளைக் கடந்த பேச்சுலர் சார்லி, நிவேதாவின் தந்தையாக வரும் ராஜா செந்தில், மியாவின் தந்தை நாகிநீடு, பாலசரவணன் என யாரும் குறை வைக்கவில்லை நடிப்பில். கே பாலச்சந்தரின் அந்தக் கால கதை ஒன்றிற்கு மாடர்னாக ஒரு திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும்... அதுதான் இந்த ஒரு நாள் கூத்து!

ஒரு நாள் கூத்து திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஒரு நாள் கூத்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+