»   »  இன்றைய ஸ்பெஷல்... ஒரு நாள் கூத்து, வித்தையடி நானுனக்கு, பாண்டியோட கலாட்டா!

இன்றைய ஸ்பெஷல்... ஒரு நாள் கூத்து, வித்தையடி நானுனக்கு, பாண்டியோட கலாட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை மூன்று நேரடி தமிழ்ப் படங்களும் இரண்டு ஹாலிவுட் படங்களும் வெளியாகின்றன.

ஒரு நாள் கூத்து, பாண்டியோட கலாட்டா தாங்கல, வித்தையடி நானுனக்கு ஆகியவை நேரடி தமிழ்ப் படங்கள்.


கஞ்ஜுரிங் 2, வார்கிராஃப்ட்ஸ் ஆகியவை ஹாலிவுட் படங்கள்.


ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

நான்கு பெண்களின் கல்யாண கதைதான் இந்த ஒரு நாள் கூத்து. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளனர்.


வித்தையடி நானுனக்கு

வித்தையடி நானுனக்கு

ஒரு இயக்குநர், ஒரு நடிகை என இரண்டே கேரக்டர்கள்தான் படம் முழுக்க. கொஞ்சம் புதிதாக முயற்சித்திருக்கிறார்கள். ராமநாதன், சௌரா நடித்துள்ள இந்தப் படத்தை ராமநாதன் கேபி இயக்கியுள்ளார்.
பாண்டியோட கலாட்டா தாங்கல

பாண்டியோட கலாட்டா தாங்கல

இந்த வார பேய் ஸ்பெஷல் பாண்டியோட கலாட்டா தாங்கல. ஹாரர் காமெடி என்ற பெயரில் கன்னா பின்னாவென்று கற்பனை செய்திருக்கிறார்கள். மயில்சாமி, நிதின் சத்யா, இமான் அண்ணாச்சி, மனோபாலா என பெரிய காமெடிப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்தை எஸ்டி குணசேகரன் இயக்கியுள்ளார்.


காஞ்ஜூரிங் 2

காஞ்ஜூரிங் 2

ஹாலிவுட் ஹாரர் படங்களில் பெரும் வெற்றிப் பெற்ற காஞ்ஜூரிங் படத்தின் இரண்டாம் பாகம் இந்தப் படம். தமிழிலும் டப் செய்து வெளியிட்டுள்ளனர். நேரடி தமிழ்ப் படத்தைவிட அதிக திரைகளில் வெளியாகும் இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது.


வார்க்ராஃப்ட் தி பிகினிங்

வார்க்ராஃப்ட் தி பிகினிங்

இந்தப் படமும் தமிழ் / ஆங்கிலத்தில் வெளியாகிறது. 3 டி மற்றும் 2 டி வடிவில் வெளியாகும் இந்தப் படத்துக்கும் ஏகப்பட்ட தியேட்டர்கள்.


English summary
Today there are 3 direct Tamil movies including Oru Naal Koothu and two Hollywood flicks are releasing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil