»   »  தினேஷ்-மியா ஜார்ஜின் 'ஒரு நாள் கூத்து' தைரியமான முயற்சி... இயக்குனரைப் பாராட்டும் ரசிகர்கள்!

தினேஷ்-மியா ஜார்ஜின் 'ஒரு நாள் கூத்து' தைரியமான முயற்சி... இயக்குனரைப் பாராட்டும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ஒரு நாள் கூத்து.

அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 200 க்கும் அதிகமான திரையரங்குகளில் ஒரு நாள் கூத்து வெளியாகி இருக்கிறது.


திருமணம் குறித்த இன்றைய இளைஞர்களின் பார்வை மற்றும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கும், ஒரு நாள் கூத்து ரசிகர்களைக் கவர்ந்ததா? பார்க்கலாம்.


இளைஞர்களைக் கவரும்

ஒரு நாள் கூத்து படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. 2 வது பாதி சற்றே இழுவை எனினும் இளைஞர்களைக் கவரும் என்று ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.


கே.பாலச்சந்தர்

கே.பாலச்சந்தர் பாணியில் ஒரு நாள் கூத்து படத்தை எடுத்திருப்பதாக சரவணன் தெரிவித்திருக்கிறார்.


தைரியமான முயற்சி

ஒருநாள் கூத்து தைரியமான முயற்சி என்று இயக்குநர் நெல்சனைப் பாராட்டியிருக்கிறார் கிஷோர்.


இசை + எடிட்டிங்

ஜஸ்டின் பிரபாகரன் இசை மற்றும் படத்தின் எடிட்டிங் இரண்டும் சூப்பர் என்று ரமேஷ் பாராட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் ஒரு நாள் கூத்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.English summary
Dinesh-Mia George Starrer Oru Naal Koothu Released Today Worldwide. Written and Directed by Nelson - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil