»   »  மியா ஜார்ஜின் தமிழ் அவ்ளோ அழகு

மியா ஜார்ஜின் தமிழ் அவ்ளோ அழகு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நாள் கூத்து திரைப்படம் முழுக்க முழுக்க இந்தியத் திருமணங்களைப் பற்றிய ஒரு கதை என்று படத்தின் இயக்குநர் நெல்சன் தெரிவித்திருக்கிறார்.

அட்டக் கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் ரித்விகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு நாள் கூத்து. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படம் முழுவதும் காமெடி அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.


Oru Naal Koothu Story

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் நெல்சன் படத்தின் கதை மற்றும் நடித்தவர்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறும்போது " ஒரு நாள் கூத்து முழுவதும் இந்திய திருமணங்களை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கிறேன்.


தினேஷ் முதல்முறையாக மென்பொருள் பணியாளராகவும்,மியா ஜார்ஜ் இப்படத்தில் திண்டுக்கல்லில் வசிக்கும் கிராமத்துப் பெண்ணாகவும் நடித்திருக்கின்றனர்.


Oru Naal Koothu Story

மியா ஜார்ஜின் தமிழ் உச்சரிப்பும்,வசனங்களை உச்சரிக்கும் பாங்கும் அழகாக இருந்தது. முக்கியமாக அவர் சுலபமாக தமிழ் வசனங்களை எளிதாக மனப்பாடம் செய்து பேசினார்" என்று மியா ஜார்ஜின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நெல்சன்.


ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறினாலும், இந்த வருடக் கடைசியில் படம் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

English summary
Dinesh - Mia George Starrer Oru Naal Koothu Director Nelson says in Recent Interview "Oru Naal Koothu may be Release by the end of this Year".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil