ஒரு ஊர்ல ரெண்டு ராஜா கதை

    ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 2014-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை    ஆர் கண்ணன் இயக்க எஸ் மைக்கல் ராயப்பன் தயாரிக்க, விமல், பிரியா ஆனந்த் மற்றும் சூரி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நாசர், அனுபாமா குமார், தம்பி ராமையா துணை கதாப்பத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். 

    கதை 

    அழகு (விமல்) மற்றும் மைகேல் (சூரி) இருவரும் நண்பர்கள். இவர்கள் சூரியின் காதலுக்காக ரயில்லில் பயணம் செய்கின்றனர். அங்கு பிரியா (பிரியா ஆனந்த்) -ஐ சந்திக்கின்றனர். முதலில் இருவரும் பிரியாவை  தவறாக நினைக்கின்றனர். பின்பு பிரியா ஒரு டாக்டர் எனவும் அவர் தன் தோழியை இழந்து சத்தத்தால் ஏற்படும் அதிர்வினால் உண்டாகும் நோயால் பலர் இறக்கின்றனர், மற்றும் பெண்களுக்கு கரு உண்டாகாமை, காது கேளாமை போன்ற குறைப்பாடுகள் ஏற்படுவதால் அதற்காக போராடுகிறார் பிரியா. அவருக்கு உதவி செய்கின்றனர் அழகு மற்றும் மைக்கல். இறுதியில் அவர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா? என்பது மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஒரு ஊர்ல ரெண்டு ராஜா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).