X
முகப்பு சினி தரவரிசை

இந்த வாரம் (பிப் 9, 2024) ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்களின் முழு லிஸ்ட்

Author Sakthi Harinath | Published: Friday, February 9, 2024, 01:06 PM [IST]

இந்த வாரம் (பிப் 9, 2024) ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் பற்றிய தகவல்கள் இந்த பட்டியலில் விரிவாக உள்ளன. இங்கு இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்களான ரஜினிகாந்த் நடித்த லால் சலாம், மணிகண்டனின் லவ்வர் மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் படங்களான கேப்டன் மில்லர், அயலான், இப்படிக்கு காதல் என பல படங்கள் பற்றிய முழு விவரங்கள் இப்னு உள்ளன, இதோ.


cover image
Video Thumbnail

Lal Salaam - லால் சலாம்

லால் சலாம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா என பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை கிரிக்கெட் விளையாட்டை சார்ந்த திரைக்கதையில் வடிவமைத்து இயக்கியுள்ளார், இயக்குனர். லால் சலாம் படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி...

Video Thumbnail

Lover - லவ்வர்

லவ்வர் - இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தனது 'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன்...

Video Thumbnail

Ippadikku Kadhal - இப்படிக்கு காதல் | ஆஹா தமிழ்

இப்படிக்கு காதல் - இயக்குனர் பாரத் மோகன் இயக்கத்தில் பரத், ஜனனி, சோனாக்ஷி சிங், பாண்டியராஜன் என பல திரை பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சபரீஷ் குமார் தனது மேர்கி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம்  தயாரிக்க, இசையமைப்பாளர் அரோல் கோரெல்லி இசையமைத்துள்ளார்.

Video Thumbnail

Ayalaan - அயலான் | சன் நெக்ஸ்ட்

அயலான் - இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள அறிவியல் புனைவு திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கொட்டப்படி ஜே ராஜேஷ் தனது KJR தயாரிப்பு...

Video Thumbnail

Captain Miller - கேப்டன் மில்லர் | அமேசான் பிரைம்

கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ் குமார் என பல திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் தியாகராஜன் 'சத்யா ஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார்...

Video Thumbnail

Aquaman and the Lost Kingdom - அக்வாமேன் 2 | அமேசான் பிரைம்

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் (Aquaman and the Lost Kingdom): இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் ஜேசன் மோமோவா, அம்பர் கேர்ட், பாட்ரிக் வில்சன் என பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை டிசி (DC) காமிக்ஸ் புத்தகத்தின் கதை அடைப்படையில் உருவாக்கியுள்ளனர்,...

Video Thumbnail

குண்டூர் காரம் - குண்டூர் காரம் | நெட்ப்ளிக்ஸ்

குண்டூர் காரம் - 2024 பொங்கல் ரிலீஸ் படமாக தெலுங்கு சினிமாவில் வெளியான குடும்ப திரைப்படம். இப்படத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா என பல முக்கிய நடிகர்கள் நடித்துளள்னர். இப்படம் 2024 பிப் 9ல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

Video Thumbnail

காடீரா - காடீரா | ஜீ சினிமா

காடீரா - 2023 டிசம்பர் மாத இறுதியில் கன்னட சினிமாவில் வெளியான குடும்ப & அதிரடி திரைப்படம். இப்படத்தில் கன்னட சினிமா ஸ்டார் தர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2024 பிப் 9ல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

Video Thumbnail

தி மார்வெல்ஸ் - தி மார்வெல்ஸ் | டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

தி மார்வெல்ஸ் - ஹாலிவுட் சினிமாவின் மார்வெல் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படம். இப்படம் 2024 பிப் 9ல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்து ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.

Video Thumbnail

தி நன் 2 - தி நன் 2 | ஜியோ சினிமா

தி நன் 2 - ஹாலிவுட் சினிமாவில் வெளியான திகில் திரில்லர் திரைப்படம். இப்படம் 2024 பிப் 9ல் ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்து ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+