ஒத்தைக்கு ஒத்த புதுமுக இயக்குனர் பர்னேஷ் இயக்கத்தில் அதர்வா, தியாகராஜன், நரேன், வித்யா பிரதீப் ஆகியோர் நடிக்கும் காதல் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள் ஆகியவற்றை மையமாக கொண்டே திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். இரண்டு கதாநாயகிகள் கொண்ட இக்கதையில் மற்றொரு நாயகி யார் என அதிகாரபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும். இயக்குனர் பா ராஜேஷின் உதவியாளர்தான் இப்படத்தின் இயக்குனர் ஆவார்.