பக்கிரி ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜான் கோல்ட்மேன் தயாரிக்க, இசையமைப்பாளர் நிக்கோலஸ் ஏறேற இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படமானது ஹாலிவுட்-ல் தி எக்ஸ்ட்ரா ஒர்டினரி ஜௌர்னே ஆப் தி பாக்கிர் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
கதை
இந்தியாவில் உள்ள மும்பையில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார் அஜா என்கிற தனுஷ். இவர் பல தந்திரங்களை கற்றறிந்து மும்பை தெருக்களில் மாயாஜாலத்தை தொகுத்து வந்துள்ளார். இவரின் தந்திரமான மாயாஜாலத்தை கண்டு பலரும் இவரை மந்திர சக்திகளை கொண்டுள்ள "மந்திரவாதி" என்று அழைக்கின்றனர்.
தீடிரென தன் தாயின் மரணத்திற்கு பின்பு, தாயின் ஆசை படி தன் தந்தையை தேடி பாரிஸுக்கு செல்கிறார். தன் தந்தையை தேடி செல்லும் இவர், பணமின்றி கையில் ஒரு 100 யூரோ போலி நோட் ஒன்றினை கொண்டு பாரிஸுக்கு சென்றுள்ளார்.
பாரிஸில் இவர் மேரி ரிவியரே (எரின் மோரியார்ட்டி) என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். இவரின் தந்திரங்கள் மற்றும் மாயாஜாலத்தை கண்டு அந்த பெண் இவரால் ஈர்க்கப்படுகிறார். தன் தந்தையை தேடி செல்லும் அஜா, இவரின் அறியாமையால் நடக்கும் ஒரு சில சிறு தவறால் பல நாடுகளுக்கு செல்கிறார், பல இடங்களுக்கு செல்லும் இவர், அங்கு பல சாகசங்களை அனுபவிக்கிறார்.
லண்டன், இங்கிலாந்து, ரோம் இத்தாலி, லிபியா என பல நாடுகளுக்கு செண்டு பல சாகசங்களை அனுபவிக்கும் இவரின் வாழ்க்கையானது இறுதியில் என ஆயிற்று? இவரின் தந்தையை கண்டறிந்தார்? என்பதே மீதிப்படம்.