X
பக்கிரி

பக்கிரி

Adventure | Comedy | 21 Jun 2019 | U/A | 101 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பக்கிரி கதை

பக்கிரி ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜான் கோல்ட்மேன் தயாரிக்க, இசையமைப்பாளர் நிக்கோலஸ் ஏறேற இசையமைத்திருக்கிறார்.  இத்திரைப்படமானது ஹாலிவுட்-ல் தி எக்ஸ்ட்ரா ஒர்டினரி ஜௌர்னே ஆப் தி பாக்கிர் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. கதை இந்தியாவில் உள்ள மும்பையில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார் அஜா என்கிற தனுஷ். இவர் பல தந்திரங்களை கற்றறிந்து மும்பை தெருக்களில் மாயாஜாலத்தை தொகுத்து வந்துள்ளார். இவரின் தந்திரமான மாயாஜாலத்தை கண்டு பலரும் இவரை மந்திர சக்திகளை கொண்டுள்ள "மந்திரவாதி" என்று அழைக்கின்றனர். தீடிரென தன் தாயின் மரணத்திற்கு பின்பு, தாயின் ஆசை படி தன் தந்தையை தேடி பாரிஸுக்கு செல்கிறார். தன் தந்தையை தேடி செல்லும் இவர், பணமின்றி கையில் ஒரு 100 யூரோ போலி நோட் ஒன்றினை கொண்டு பாரிஸுக்கு சென்றுள்ளார். பாரிஸில் இவர் மேரி ரிவியரே (எரின் மோரியார்ட்டி) என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். இவரின் தந்திரங்கள் மற்றும் மாயாஜாலத்தை கண்டு அந்த பெண் இவரால் ஈர்க்கப்படுகிறார். தன் தந்தையை தேடி செல்லும் அஜா, இவரின் அறியாமையால் நடக்கும் ஒரு சில சிறு தவறால் பல நாடுகளுக்கு செல்கிறார், பல இடங்களுக்கு செல்லும் இவர், அங்கு பல சாகசங்களை அனுபவிக்கிறார். லண்டன், இங்கிலாந்து, ரோம் இத்தாலி, லிபியா என பல நாடுகளுக்கு செண்டு பல சாகசங்களை அனுபவிக்கும் இவரின் வாழ்க்கையானது இறுதியில் என ஆயிற்று? இவரின் தந்தையை கண்டறிந்தார்? என்பதே மீதிப்படம். 
Read More

பக்கிரி நடிகர்கள் & படக்குழுவினர்

பக்கிரி அணியின் தகவல்

இயக்குனர் கென் ஸ்காட்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பக்கிரி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தனுஷும் அவரது கூட்டாளிகளும் கண்கட்டி வித்தைகாட்டி மக்களிடம் இருந்து பணம், செல்போன் போன்றவைகளை பறிக்கிறார்கள். பெரியவனான இந்த வேலையை தொடர்ந்து செய்யும் தனுஷ், தாயின் மறைவிற்கு பிறகு பிரான்ஸ் செல்கிறார். அங்கிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளிலுக்கு பயணப்படுகிறார். அவரது ஜாலியான பயண அனுபவங்களுடன், நம்மையும் கைப்பிடித்து உலக சுற்றுலாவுக்கு அழைத்து செல்கிறது படம். ஒரு ஹாலிவுட் படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடிக்கிறார் என்பது எத்தனை பெருமையான விஷயம். தனக்கும், மற்றவர்களுக்கும் அந்த பெருமையை தேடித்தந்த தனுஷுக்கு முதலில் பாராட்டுகள். தனுஷின் நடிப்பை பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. படம் முழுவதும் அவரது ராஜ்ஜியம் தான். ஒரே காட்சியில் தனுஷுடன் காதலில் விழும் எரின் மொரியாட்டி அழகு பதுமையாக வருகிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். நடிகையாகவே வரும் இன்னொரு நாயகி பெரினீ பேஜோவும் சிறப்பான தேர்வு. தனுஷின் கூட்டாளியாக கறுப்பின இளைஞராக வரும் பர்காத் அப்டி, கஸ்டம்ஸ் ஆபிசராக வந்து காமெடி செய்யும் பென் மில்லர் என அனைவரும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார்கள்.

பக்கிரி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பக்கிரி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+